For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“இந்தியாவிற்கு எதிரானவன் இல்லை” யூடர்ன் அடித்த இம்ரான்கான்! வெளிநாட்டுசதி என சொன்னது பொய்யா இம்ரான்?

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத் : தனது ஆட்சியைக் கலைக்க வெளிநாட்டு சதி நடப்பதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நான் ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எதிரானவன் அல்ல எனவும், நான் மனிதாபிமானத்துடன் இருக்கிறேன். நான் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் அல்ல என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் எதிர்கட்சிகள் நிறைவேற்றிய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் காரணமாக ஆட்சியை இழந்தார் நாட்டின் 19 பிரதமராக பதவியேற்ற முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான்.

அவருக்கு அடுத்தபடியாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவரான இம்ரான் கான், தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டினார்.

பிரதமராக இருந்தபோது வந்த பரிசுகள்! அப்படியே வைத்து கொண்ட இம்ரான் கான்! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமாபிரதமராக இருந்தபோது வந்த பரிசுகள்! அப்படியே வைத்து கொண்ட இம்ரான் கான்! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா

முன்னாள் பிரதமர் புகார்

முன்னாள் பிரதமர் புகார்

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக பேசிய இம்ரான் கான், தனது அரசை கவிழ்க்கும் முயற்சியில் வெளிநாட்டுச் சதி உள்ளதாகவும் இதற்கான ஆதாரமாக கடிதம் ஒன்று தனக்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த சதி நடப்பதாக கூறிய இம்ரான்கான், வெளிநாட்டு அதிகார வர்க்கங்கள் உள்ளூர் அரசியல்வாதிகளை பயன்படுத்தி தமக்கு நெருக்கடி கொடுக்க நினைப்பதாக குற்றஞ்சாட்டினார்.

எதிரானவன் அல்ல

எதிரானவன் அல்ல

இந்நிலையில் தான் பாகிஸ்தானில் தனக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பேசிய இம்ரான், "நான் எந்த நாட்டுக்கும் எதிரானவன் அல்ல. நான் இந்தியாவுக்கு எதிரானவன், ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரானவன் அல்ல. நான் மனிதாபிமானத்துடன் இருக்கிறேன். நான் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் அல்ல" என்று கூறியுள்ளார். கராச்சியின் பாக்-இ-ஜின்னாவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் உரையாற்றிய அவர், தான் மனிதாபிமானத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அடிமையா?

பாகிஸ்தான் அடிமையா?

சமீபத்தில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியிழந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வீழ்த்துவதற்கு "வெளிநாட்டு சதி" என்று அமெரிக்காவிற்கு எதிராக நாடு முழுவதும் அவரது கட்சி பல போராட்டங்களை நடத்தியது. அதேசமயம், ஐநா பொதுச் சபையின் சிறப்பு அமர்வின் போது ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்குமாறு பாகிஸ்தானைக் கேட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை இம்ரான் கான் கடுமையாக சாடியிருந்தார், இஸ்லாமாபாத்தை அவர்கள் "அடிமையாக" கருதுகிறீர்களா? என்றும் கேட்டார்.

விமர்சித்த இம்ரான் கான்

விமர்சித்த இம்ரான் கான்

நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று நாட்டில் பிரச்சாரம் செய்தும் வருகிறார். முன்னதாக இந்தியாவை விமர்சித்த இம்ரான் கான், தற்போது சமீப காலமாக இந்தியாவை திரும்ப திரும்ப பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இந்தியர்கள் 'குதர் குவாம்' (சுய மரியாதை கொண்டவர்கள்) என்று கூறினார்.

இந்தியர்களின் சுயமரியாதை

இந்தியர்களின் சுயமரியாதை

அதற்கு முன்னதாக, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது என்றும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் உள்ளது என்பதை இம்ரான் கான் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தேசிய தலைவர்களும் நாட்டின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புக்கு எதிராக உரைகளை நிகழ்த்தினர். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முக்கிய கூட்டாளியான அவாமி முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் ரஷீத், இம்ரான் கானுக்காக "பாத்திமா ஜின்னாவின் கூட்டத்தின் சாதனையை நகரம் முறியடித்துவிட்டது" என்று கூறினார்.

English summary
Former Pakistani Prime Minister Imran Khan has accused foreign conspirators of plotting to overthrow his government in recent days. I am not against Europe, the United States and India, I am with humanity. I have been told that I am not against any community.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X