டல்லஸ் தமிழ்ச் சங்க தலைவர் தேர்தல்- பஞ்சு அருணாச்சலம் மகள் வெற்றி
டல்லாஸ்(யு.எஸ்): டல்லஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் தேர்தலில் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகள் கீதா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் அமெரிக்க நகரங்களில் ஒன்றான டல்லாஸில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம் 33 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
தமிழர்களை ஒன்றிணைக்கும் பணிகளுடன், ஆண்டு தோறும் தமிழர் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு தமிழ் - கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் பல்வேறு குழுக்களுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

புதிய நிர்வாகிகள்
2014-15 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்வு செய்தனர். இதில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகள் கீதா அருணாச்சலம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கவிஞர் கண்ணதாசனின் மகள் வயிற்று பேரன் சுப்ரமணியனை மணந்த இவர், டல்லாஸ் நகரில்10 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றுவதுடன், பல்வேறு சமூகப்பணிகளிலும் பங்கெடுத்து வருகிறார்.
டல்லாஸில் பதினைந்து ஆண்டுகளாக வசித்து வரும் கஸ்தூரி கோபிநாத் செயலாளராக வெற்றி பெற்றார். முன்னதாக சமூகப் பணிகளுக்காக நிதி திரட்டும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளார். கணிணித் துறையில் பணியாற்றி வரும் தமிழ்மணி கமலநாதன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். ஏழாண்டுகளாக குடும்பத்துடன் டல்லாஸில் வசித்து வரும் இவர், சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சமூகப்பணிக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் முக்கிய ஒருங்கிணைப்பு பணியையும் செய்து வருகிறார். திருக்குறள் போட்டியிலும் முக்கியப் பொறுப்பேற்று பணியாற்றுகிறார்.

தேர்தல் மூலம் தேர்வு
தமிழ்ச் சங்கத்தின் புரவலர் பால் பாண்டியன், ஆலோசகர் விஜி ராஜன் மற்றும் 2012-13 ஆம் ஆண்டின் தற்போதைய தலைவர் கலைச்செல்வி நாயகம் ஆகியோர், சங்க விதிமுறைகளின் படி கால்டுவெல் வேல்நம்பி மற்றும் ஸ்ரீனி வாசன் ஆகிய இருவரும் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். தேர்தல் விதிமுறைகளின்படி போட்டிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சங்க உறுப்பினர்களின் இமெயில் முகவரிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. இமெயில் மூலம் ஒவ்வொரு வேட்பாளரும் உறுப்பினர்களுக்கு தங்கள் விவரம் மற்றும் திட்டங்களை குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்தனர். தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய கால்டுவெல் கூறுகையில், டல்லாஸ் தமிழ்ச் சங்க வரலாற்றில் இது முக்கியமான மைல்கல் ஆகும். சமூகப்பணியாற்ற தமிழர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும். போட்டியிட்ட அனைவரும் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
குடவோலை டூ இமெயில் வாக்குகள்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டு இறுதி நிகழ்ச்சியில், உறுப்பினர்கள் முன், வேட்பாளர்கள் நேரிடையாக வேண்டுகோள் விடுத்தனர். சங்க உறுப்பினர்கள் வாக்குசீட்டுகள் நிரப்பி தேர்தல் குழுவினரிடம் ஒப்படைத்தனர். விடுமுறை காலம் என்பதால், நேரில் வந்து வாக்களிக்க இயலாதவர்களுக்கு வசதியாக, இமெயில் மூலமாகவும் வாக்கெடுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பண்டைய தமிழர்கள் குடவோலை முறையில் வாக்குச்சீட்டை அறிமுகப்படுத்திவர்கள், அமெரிக்கத் தமிழர்களோ இமெயில் மூலமாக வாக்குச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

தமிழையும் தமிழர்களையும் உயர்வு பெறச் செய்வோம்
புதிய தலைவர் கீதா பேசும் போது, 'அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் ஆர்வத்தை உருவாக்கவும், தமிழ் பண்பாட்டையும், பெருமையையும் உயரச்செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என்றார்.
தன்னலம் கருதாமல் சமுதாயப் பணியாற்றுபவர்களுக்கு, தெய்வம் முன் நின்று வேலை செய்யும் என்ற பொருள்படும் திருக்குறளை உவமையாகச் சொல்லி அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டினார். இவர், டல்லாஸில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் 500 குறள்களை அர்த்தத்துடன் சொல்லி வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செயலாளராக பதவியேற்ற கஸ்தூரி பேசுகையில், அதிகரித்து வரும் தமிழர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல், புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என்றார். உயர்நிலைப்பள்ளி, கல்லூரி பருவத்தில் இருக்கும் தமிழ்க் குழந்தைகளை ஒன்றிணைக்கும் வகையில் ஒருங்கிணைப்பு திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் கூறினார். பொருளாளர் தமிழ்மணி, தனது உரையில், தமிழ்ச்சங்க நடவடிக்கைகளை முற்றிலும் கணிணி மயமாக்கும் முயற்சிகள் முதன்மையானது என்றார்.
செய்தியாளாரிடம் கூறுகையில், அடுத்த தேர்தல் தமிழ்ச் சங்கத்தின் இணையதளம் மூலமாகவே இன்னும் எளிமையான முறையில் நடைபெறச் செய்யவேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
சாதனைப் பட்டியலும் இன்னிசை விருந்தும்
முன்னதாக தற்போதைய தலைவர் கலைச்செல்வி பேசுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்ச் சங்கம் நடத்திய நிகழ்ச்சிகளை தொகுத்துரைத்தார். சங்க வளர்ச்சிக்காகவும், தமிழ் சமுதாய மேம்பாட்டிற்காகவும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் கூறினார். தற்போதைய நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கு, புரவலர் பால்பாண்டியன் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குழந்தைகளின் திறனை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications