அடப்பாவமே!.. 5 வயது சிறுமியை வெயிலில் நிற்க வைத்த கொடூரம்.. தாகத்தால் பலியான சம்பவம்!
பெர்லின்: அடிமை போல் நடத்துவதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு தம்பதியினரால் வாங்கப்பட்ட 5 வயது சிறுமியை வெயிலில் நிற்க வைத்ததால் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியை விட்டு வெளியேறினார். பின்னர் துருக்கி மற்றும் சிரியா வழியாக ஈராக் சென்ற அவர் அங்குள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார்.
அவரும் அவரது கணவரும் கடந்த 2015-ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை அடிமையாக விலைக்கு வாங்கினர். அந்த குழந்தைக்கு ஒரு நாள் உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதனால் அவர் மெத்தையில் சிறுநீர் கழித்துவிட்டார்.

கொளுத்தும் வெயில்
இந்த காரணத்தால் ஆத்திரமடைந்த ஜெனிபரின் கணவர் அந்த சிறுமியை வெளியே இழுத்து சென்று கட்டி வைத்தார். இதனால் கொளுத்தும் வெயிலில் அந்த சிறுமிக்கு தாகத்துக்குகூட தண்ணீர் கொடுக்காமல் விட்டு விட்டனர்.

ஆதாரம்
இதில் அந்த சிறுமி பலியானார். அந்த சிறுமி இறந்தவுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெர்மன் தூதரகத்தை அணுகிய ஜெனிபர் புதிய அடையாள சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தார். குழந்தை சாவில் ஜெனிபருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்காததால் அவர் சொந்த நாடு திரும்ப துருக்கி போலீஸார் அனுமதித்தனர்.

ஆஜர்
இந்நிலையில் ஜெனிபர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் சிரியாவுக்கு செல்ல ஆயத்தமானார். அப்போது அவரை ஜெர்மன் நாட்டு போலீஸார் கைது செய்தனர். அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.

சிறையில் அடைப்பு
இந்த தவறை அவரது கணவர் செய்திருந்தாலும் அதை தடுத்து அக்குழந்தையை காப்பாற்ற ஜெனிபர் தவறிவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது போர் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கபபட்டார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications