ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
பெர்லின்: ஜெர்மனியில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆட்சியில் இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில், கூட்டணிக் கட்சியை சேர்ந்தவரான நிதி அமைச்சரை சான்சலர் ஒலாப் ஸ்கால்ஸ் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில், ஒலாப் ஸ்கால்ஸின் சமூக ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி, கட்சியும் கடும் போட்டியை அளித்து வருகிறது.
ஆளும் கட்சி சார்பில் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU-CSU) சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர், சான்சலர் பதவிக்கான தேர்தலில் மோதுகின்றனர். பசுமை கட்சியின் ராபர் ஹபெக்கும் களத்தில் இருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் சான்சலர் ஆவதற்கே வாய்ப்புள்ளதாகவும், அவரது கன்சர்வேடிவ் கட்சியே முன்னணியில் இருப்பதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் தெரியவந்துள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளின்படி, பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி (CDU/ CSU) கூட்டணி தேர்தலில் 28.9% வாக்குகளையும், தீவிர வலதுசாரி கட்சியான AFD (Alternative for Germany) 19.9% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்து எதிர்க் கட்சியாக உருவெடுக்கும் என தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் தற்போதைய சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸின் SPD கட்சி 16% வாக்குகளுடன் 3வது இடம் பிடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஜெர்மனி சான்சலர் பதவிக்கான தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி உறுதியானதை தொடர்ந்து, ஒலாஃப் ஸ்கால்ஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பிரெட்ரிக் மெர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தேர்தல் முடிவுகளானது SPD கட்சியினருக்கு கசப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications