For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எப்போதும் சிரித்து கொண்டே இருப்பாள் அமல்.. ஆனால் நமக்கு கண்ணில் ரத்தம் வழிகிறது!

7 வயது ஏமன் நாட்டு சிறுமியின் புகைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Google Oneindia Tamil News

ஏமன்: இந்த ஒரு புகைப்படம்தான் கல் மனதையும் கரைத்து கொண்டு வருகிறது... இந்த ஒரு புகைப்படம்தான் உலகையே அவமானப்பட்டு வெட்கி தலை குனிய வைத்து வருகிறது.

ஏமன் நாட்டில் 2015, மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பித்த போர்தான்... இன்னும் ஓயாமல் நடந்துக்கிட்டு இருக்கு. அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும்தான் இந்த சண்டை நடக்கிறது. அதிபர் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்... கிளர்ச்சி படையோ ஷியா பிரிவை சேர்ந்தவர்கள்... இதுதான் பிரச்சனையே!! இப்படி ஆரம்பித்ததுதான் இந்த உள்நாட்டு போர்!!

[சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரிய விபத்து.. 14 பேர் பலி : 40 பேர் படுகாயம்]

லட்சக்கணக்கானோர் பலி

லட்சக்கணக்கானோர் பலி

ஆனாலும் அதிபருக்கு சவுதி அரேபியா சர்ப்போர்ட் இருக்கிறது. கிளர்ச்சி படைக்கு ஈரான் சப்போர்ட் உள்ளது. இதில் யாருடைய பலம் அதிகமாக இருக்கும்? நிச்சயம் அதிபரின் பலம்தான். அதனால்தான் சவுதி அரேபியா தாக்குதல் மேல் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. விளைவு... ஏமனில் பசி, பட்டினி, வன்முறையில் மக்கள் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்கள். சண்டை ஆரம்பித்து இந்த 3-வது வருஷத்தில் மட்டும் லட்சக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

7 வயது சிறுமி

7 வயது சிறுமி

குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு பசி, பட்டினி, குண்டு முழக்கம், உயிரிழப்பு, ரத்தகாயங்கள், இதைதவிர வேறு எதுவுமே தெரியாது. குழந்தைகள் இறப்பதே அநியாயம் என்றால் அவைகள் பசி பட்டினியால் இறப்பது எவ்வளவு பெரிய வயித்தெறிச்சல்!! அப்படித்தான் அமல் ஹுசேன் இறந்திருக்கிறாள். 7 வயது சிறுமிதான் அமல்... இவளுக்கு நினைவு தெரிந்து கண்ணால் பார்த்தும், அனுபவித்ததும் பசி... பசி... பசி மட்டும்தான். கடைசியில் பசியே அவளை முழுவதுமாக தின்று தீர்த்துவிட்டது.

அமலின் எலும்புகள்

அமலின் எலும்புகள்

அமல் பசியால் இறந்தே போய்விட்டாள்! அவளது புகைப்படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டதும், உலக நாடுகள் எல்லாமே கலங்கி போய்விட்டன. அந்த படத்தில் எலும்பும் தோலுமாக இருக்கிறாள் அமல்... சாப்பிட்டு எத்தனை நாளானதோ, வாரமானதோ, வருடமானதோ... தெரியவில்லை. அவளது எலும்புகள் அங்கங்கே நீட்டிக் கொண்டு நிற்கின்றன.

முடிவுக்கு வர வேண்டும்

முடிவுக்கு வர வேண்டும்

இந்த போட்டோவை பார்த்ததும், எப்படியாவது ஏமனில் நடக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே லட்சக்கணக்கானோர் இறந்துவிட்டார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமல் கடைசியாக பலியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

நமக்கு சக்தி இல்லை

நமக்கு சக்தி இல்லை

மகளை இழந்தது என் இதயத்தை வெட்டி கூறுபோட்டதை போல இருக்கிறேன் என்றும், இப்போது கூட அமலை போல மற்ற குழந்தைகளின் நிலையை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது என்றும் பெற்ற தாய் கதறுகிறார். இறுதியாக அந்த தாய் சொன்னது... அமல் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாளாம்!! நமக்குத்தான் ஏனோ அமலின் போட்டோவை பார்க்க சக்தியே இல்லை!!

English summary
Girl Who Became Symbol of Humanitarian Crisis Dies at 7 in Yemen
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X