For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடிப்படை கல்வி கூட கிடைக்காத குழந்தைகள் 5.8 கோடி - யுனெஸ்கோ

Google Oneindia Tamil News

பாரிஸ்: உலக அளவில் பள்ளிக்கு செல்லாத சிறார்களின் எண்ணிக்கை இன்னும் 5.8 கோடியாக உள்ளது என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

யுனெஸ்கோவின் கருத்துப்படி பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டில் இருந்து சிறிதளவே உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், சில நாடுகள் இக்கல்வி தரத்தில் நல்ல வளர்ச்சியைக் காட்டி உள்ளன.

குறையும் உதவிகள்:

குறையும் உதவிகள்:

"யுனெஸ்கோவின் சமீபத்திய தகவலின்படி கல்விக்கான உதவிகள் பெருமளவில் குறைந்துவிட்டது. குறைந்து வரும் பள்ளிகளின் எண்ணிக்கையும் பயத்தை அதிகப்படுத்துகின்றது.

தொடக்க கல்வியின் தேவை:

தொடக்க கல்வியின் தேவை:

வேறு வழியே இல்லை 2015 க்குள் அனைத்து நாடுகளும் தொடக்க கல்வியின் அத்தியாவசியத்தை மக்களுக்கு உணர்த்தி, கல்வி பெற்றோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" என்று யுனெஸ்கோவின் இயக்குனர் ஐரினா போகோவா கூறியுள்ளார்.

பள்ளிகள் குறைவு:

பள்ளிகள் குறைவு:

பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் 2010 ஆம் ஆண்டில் இருந்து கல்விக்கான உதவி 10 சதவீதமாக குறைந்துள்ளது.

4வது இடத்தில் இந்தியா:

4வது இடத்தில் இந்தியா:

தொடக்க கல்வி பற்றாக்குறையான நாடுகளில் இந்தியா 4 ஆவது இடத்தில் உள்ளது. இந்த அதிக அளவிளான எண்ணிக்கையால் இந்தியாவிற்கான கல்வி உதவிகள் பெருமளவில் குறைந்துள்ளன.

கல்வியின்றி தவிப்பு:

கல்வியின்றி தவிப்பு:

நேபாளில், 24 சதவீத குழந்தைகள் 2000இல் இருந்தே பள்ளி கல்வி இல்லாமல் தவிக்கின்றனர். 2010 இல் இந்த சதவீதத்தில் ஒன்றே ஒன்று குறைந்துள்ளது.

காரணங்கள்:

காரணங்கள்:

கல்விக்கட்டண குறைவு, கல்விச் செலவுகளுக்கான நிதி அதிகரிப்பு, உயரும் கல்வித்தரம் போன்ற காரணிகளால் மட்டுமே இந்த பிரச்சினையை சரி செய்ய இயலும் என்று கூறப்பட்டுள்ளது.

இலக்கை அடைய முயற்சி:

இலக்கை அடைய முயற்சி:

கல்வியில் பல நாடுகள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள போதிலும், அவர்களது இலக்கை அடைய இன்னும் வெகு தூரம் போக வேண்டியுள்ளது.

திறமைகள் வளர்ச்சி தேவை:

திறமைகள் வளர்ச்சி தேவை:

ஒவ்வொரு குழந்தையும் பள்ளிப் படிப்பில் சேருவதையும், அதை வெற்றிகரமாக முடிப்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆக்கப்பூர்வமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துத் திறமைகளையும் அவர்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

அனுபவப் பாடம்:

அனுபவப் பாடம்:

இன்று புருண்டி, கானா ஆகிய நாடுகள் பெற்றுள்ள அனுபவங்களிலிருந்து மற்றவர்கள் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்றும் ஐரினா கூறியுள்ளார்.

மிகப்பெரிய இழப்பு:

மிகப்பெரிய இழப்பு:

கல்வியை மேம்படுத்த எவ்வளவோ திட்டங்கள் இருந்த போதிலும், இன்னும் அடிப்படைக் கல்வி கூட கிடைக்கப்பெறாத குழந்தைகள் இருப்பது உலகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஒரு மிகப்பெரிய இழப்புதான் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.

English summary
Global number of out-of-school children aged 6-11 is still as high as 58 million, showing little overall improvement since 2007, new UNESCO data show. But some countries buck the trend and show that rapid progress is possible.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X