For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேரியாவை ஒழிக்க கொசுக்களே உதவும்- ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Google Oneindia Tamil News

லண்டன்: கொசுக்கள் மூலம் மலேரியா ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டியுள்ளனர்.மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. இவை அனோபிலெஸ் கேம்பியா கொசுக்களால் உருவாகிறது.

இதன் பெண் கொசுக்கள் மலேரியா நோய்க்கிருமிகளை உற்பத்தி செய்கிறது.

GM mosquitoes a ‘quantum leap’ towards tackling malaria

பின்னர் அது ஒருவரை கடிப்பதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் புகுந்து மலேரியா நோயை ஏற்படுத்துகிறது. எனவே, மலேரியா என்ற கொடிய நோயை கொசுக்கள் மூலமே ஒழிக்க லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டி ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

அதன் படி புதிய மரபணு மூலம் மலேரியாவை உருவாக்கும் அனோபிலெஸ் காம்பியே கொசுக்களில் ஆண் கொசுக்களை மட்டும் 6 தலைமுறைகளாக மாற்றி மாற்றி உருவாக்கினர். அதன் மூலம் மலேரியாவை பரப்பும் பெண் கொசுக்கள் ஒழிந்து ஆண் கொசுக்களை மட்டும் பெருக்கமடைய செய்தனர்.

இதன் மூலம் மலேரியா கிருமிகளை உருவாக்கும் கொசுக்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

English summary
Scientists have hailed the genetic modification of mosquitoes that could crash the insect’s populations as a “quantum leap” that will make a substantial and important contribution to eradicating malaria.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X