தங்கத்தை இனி தோண்ட வேண்டாம்.. வாழைப்பழ கணக்காக, பூமிக்கு மேலே வழுக்கிக்கொண்டு வரும் 'கோல்டு'

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தங்கம் வேண்டும் எனில் தோண்ட வேண்டும். ஆனால், பூமியின் மேற்பரப்பில் தங்கம், லாவா மூலமாக வெளியேறி வருவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இப்போதைக்கு பூமியின் மேற்பரப்பில் தங்கம் அதிகம் இருக்கும் பகுதி அமெரிக்காவின் 'ஃபோர்ட் நாக்ஸ்' தான். இங்கு 4,585 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இருக்கிறது. இவை அனைத்தையும் கட்டிகளாக அமெரிக்கா அரசு இருப்பு வைத்திருக்கிறது. ஆனால் இங்கு இருப்பதை விட பல மடங்கு தங்கம் பூமிக்கு அடியில் இருக்கிறது. உலக உருண்டையை எடுத்து உருக்கினால் எவ்வளவு தங்கம் கிடைக்குமோ அதில் வெறும் 00.001%தான் மனிதர்களிடம் இருக்கிறது. மீதி 3,000 கி.மீ ஆழத்தில் பத்திரமாக இருக்கிறது.

Gold Earth

இதை வெளியில் எடுப்பது சாத்தியமே இல்லாத காரியமாகும். காரணம், மனிதர்கள் அனுப்பிய கருவிகள் இதுவரை அதிகபட்சமாக வெறும் 12 கி.மீ ஆழத்திற்கு மட்டுமே சென்றிருக்கின்றன. அப்படியெனில் 3000 கி.மீ ஆழத்தை தொடுவது வேலைக்கு ஆகாத காரியம். ஆனால் அவ்வளவு ஆழத்திலிருக்கும் தங்கம் தற்போது உருகி மேலே வரத் தொடங்கியுள்ளதாக நேச்சர் ஆய்விதழில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை கோட்டிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹாவாய் தீவில் உள்ள எரிமலை குழம்பில் உருவான பாறைகளை ஆய்வு செய்தபோது தங்கத்தை விட அரிய வகை உலோகமாக கருதப்படும் ருத்தேனியம் கண்பிடிக்கப்பட்டது. இதுவும் தங்கம் இருக்கும் 3000 கி.மீ ஆழத்தில்தான் இருக்கும். அப்படி இருக்கையில் எப்படி பூமிக்கு மேலே வந்தது? இதற்கு காரணம் எரிமலை வெடிப்புதான். அதுதான் ஆழத்திலிருந்து இதனை வெளியில் கொண்டு வந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

எரிமலை வெடிப்பு நேரத்தில் இப்படி அரிய வகை உலோகங்கள் வெளியே வரும் என்று கோட்பாட்டளவில் நம்பப்பட்டிருந்தாலும், தங்கத்தையும் ருத்தேனியத்தையும் எரிமலை பாறைகளிலிருந்து கண்டுபிடித்திருப்பது இதுவே முதல்முறையாகும். சரி அப்புறம் என்ன? இனி எரிமலை எங்கெல்லாம் வெடிக்குதோ, அங்கு பாறைகளை ஆய்வு செய்து, தங்கத்தை பிரித்தெடுக்க வேண்டியதுதானே? என்று கேள்வி எழலாம். அது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது.

பல லட்சம் டன் எடை கொண்ட பாறைகளையும், சாம்பல்களையும், லாவாக்களையும் எரிமலை கக்குகிறது. இதில் தங்கம் எங்கு இருக்கும்? என்பதை தேடுவது, கடலில் குண்டூசியை போட்டுவிட்டு தேடும் கதையாகும். மட்டுமல்லாது உலகம் முழுவதும் அக்டிவாக சில ஆயிரம் எரிமலைகள் இருந்தாலும், அவை அனைத்தும் எப்போதும் வெடித்துக்கொண்டெ இருப்பதில்லை. எப்போது வெடிக்கும் என்பது கூட நமக்கு தெரியாது. வெடிக்கும்போது தங்கத்தை தேட வேண்டும். டெக்னாலஜி வளர்ந்துவிட்டால், தங்கத்தை கண்டுபிடிப்பது எளியதாகிவிடும்.

என்ன இருந்தாலும் தங்கத்தை கண்டுபிடிப்பது கஷ்டமான விஷயம்தான். எனவே இப்போதைக்கு தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்பு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+