என்ன கூட்டமே இல்லை.. சீனாவில் டிரான்ஸ்லேஷன் சேவையை நிறுத்தியது கூகுள்.. ஏன் தெரியுமா?
பெய்ஜிங்: சீனாவில் ஏற்கெனவே கூகுள் தனது சேவையை நிறுத்தியுள்ள நிலையில் (முழுமையாக அல்ல) தற்போது டிரான்ஸ்லேட் சேவையையும் கூகுள் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் தனது கரங்களை ஆக்டபஸ் போல விரித்துள்ள கூகுள் சீனாவில் தனது டிரான்ஸ்லேட் சேவையை நிறுத்திக்கொண்டதா? என பலரும் ஆச்சரியமடைந்தனர்.
ஏற்கெனவே ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து குட்டு வாங்கியுள்ள கூகுளுக்கு சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.

சேவை
பிரபல சர்ச் என்ஜினான கூகுள் உலகம் முழுவதும் தனது கிளையை ஆழமாக பரப்பியுள்ளது. அதாவது நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது கூட கூகுளுக்கு தெரியும். ஆனால் என்னதான் ஊருக்கே ராஜாவாக இருந்தாலும், வெளியூர் போனால் அவரும் பயணிதானே! அந்த மாதிரி கடந்த சில ஆண்டுகளாக கூகுள் சீனாவில் தனது சேவையை தொடங்கி நடத்தி வந்திருந்தது. இது எல்லாம் 2010க்கு முன்னர்தான்.

ஹேக்கர்கள்
இப்படி இருக்கையில், சீனாவுக்குள் நுழையும் போதே அந்நாட்டின் சட்ட திட்டங்களை கறாராக கடைப்பிடித்தால் மட்டுமே இங்கு இருக்க முடியும் என்று சீனா கூறியிருந்தது. அது ஏன் அப்படி கூறியது என இப்போது நமக்கு தெரிந்திருந்தாலும் பலர் சீனாவை அப்போது கடுமையாக விமர்சித்தார்கள். இதெல்லாம் நடந்து கடைசியில் தாக்குப்பிடிக்க முடியாமல் 2010ல் கூகுள் அங்கிருந்து மூட்டைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டது. ஹேக்கர்கள் தொல்லையால்தான் இவ்வாறு நடப்பதாக கூகுள் காரணம் கூறியது.

ஏழாம் பொருத்தம்
கூகுளையே ஹேக் செய்யும் அளவு அங்கு மென்பொறியாளர்கள் இருப்பதன் காரணமாக கூகுளை விட சிறந்த சீன அப்ளிகேஷன்கள் கூகுள் வழக்கும் சேவையை வழங்கின. அக இப்படியாக தொடர்ந்து கூகுளுக்கும் சீனாவுக்கும் ஏழாம் பொருத்தம் இருந்த நிலையில், தற்போது கூகுள் தனது டிரான்ஸ்லேசன் சேவையையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த 2017ல் அந்நாட்டில் கூகுள் இந்த சேவையை தொடங்கியிருந்தது. இவ்வாறு இருக்கையில் 'Black Panther' என எழுதினால் 'கருப்பு பாந்தர்' என மொழி பெயர்த்த கூகுளை அந்நாட்டு மக்கள் வைத்து செய்திருக்கிறார்கள்.

கூகுள் டிரன்ஸ்லேஷன்
இப்போது இந்த மாதிரி மோசமாக இல்லாமல் டிரன்ஸ்லேஷனை கூகுள் மிகவும் மேம்படுத்தியிருந்தாலும், சீன மக்கள் என்னவோ உள்ளூர் செயலிகளையே பெரிதும் நம்பினர். எனவே நுகர்வோர்கள் குறைந்த நிலையில் தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக கூகுள் அறிவித்துள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கான ரூபாய் அபராதம், வட கொரியாவிடம் குட்டு என கூகுள் கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சீனாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளது அந்நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications