மீண்டும் வெடித்த ஹவாய் எரிமலை.. மொத்த தீவையும் சுற்றிவளைத்த லாவா
அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் உள்ள எரிமலை தற்போது மீண்டும் வெடித்துள்ளது.
ஹவாய்: அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் உள்ள எரிமலை தற்போது மூன்றாவது முறையாக வெடித்துள்ளது. கடந்த இரண்டு வருடமாக மாறி மாறி வெடித்துக் கொண்டு இருந்த எரிமலை தற்போது மீண்டும் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டு வருகிறது.
இது மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் அவர்கள் இருந்த பகுதியைவிட்டு வெளியேறினார்கள். இதற்காக அமெரிக்க அரசு மீட்பு படையை அனுப்பி இருந்தது. ஆனாலும் இன்னும் பல்லாயிர கணக்கான மக்கள் மீட்கப்பட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
மக்கள் வசிப்பிடத்தை நோக்கி இந்த எரிமலை குழம்புகள் வரும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் வெளியேறும் வழியிலும் எரிமலை சூழ்ந்து இருக்கிறது.

கிடையாது
இங்கு எப்போது எரிமலை வெடித்தாலும் மக்கள் வெளியேற பயன்படுத்தும் வழிகளில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது. ஆனால் முதல்முறையாக, அந்த பாதையையும் தற்போது எரிமலை குழம்புகள் சூழ்ந்து இருக்கிறது. இதனால் மக்கள் நடந்து இந்த பகுதியை விட்டே வெளியே செல்ல முடியாது என்று கூறப்படுகிறது. மீட்பு வாகனமும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிலைமை மோசம்
இதனால் ஏற்கனவே மெதுவாக நடந்த மீட்பு பணி இன்னும் தாமதமாகி உள்ளது. மீட்பு வாகனம் எதுவும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. 2500 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பலர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் மீட்புபணி செய்ய முடியாததால், இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக வெளியிட முடியவில்லை.

என்ன வரலாறு
1975ல் இருந்தே இந்த தீவில் எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. முக்கியமாக கிலாயூ என்ற எரிமலைதான் அதிக வீரியத்துடன் காணப்பட்டது. தற்போது இந்த எரிமலைதான் வெடித்துள்ளது. ஹவாய் தீவில் மிகவும் தீவிரமான நிலையில் வெடிக்கக்கூடிய வகையில் பல எரிமலைகள் இருக்கிறது. அந்த வகையில் கிலாயூ எரிமலை ஒரு வாரம் முன்பு வெடித்தது. மிகவும் மோசமான நிலையில் நெருப்பு குழம்புகளை கக்கிக் கொண்டு இருக்கிறது.

தற்போதைய நிலைமை
தற்போதும் இந்த எரிமலை தொடர்ந்து வெடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த எரிமலையில் இருந்து வரும் லாவா குழம்புகள் மொத்தம் 1,093 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருப்பதாக அமெரிக்க கூறியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இத்தனைக்கும் மத்தியில் அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications