For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'வெறும் 15 நிமிடங்களில்.. எல்லாம் முடிந்துவிட்டது..' ஜெர்மனி பெருவெள்ளத்தில் 150பேர் பலி, பலர் மாயம்

Google Oneindia Tamil News

பெர்லின்: மேற்கு ஐரோப்பாவில் பெய்த மிகக் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தபட்சம் 150 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    Floods in Germany | Death toll climbs in western Germany flooding

    உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே தான் செல்கிறது.

    அறிவியல் துணையுடன் புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகள் முன்கூட்டியே கனிக்கப்படுகிறது. இருந்தாலும்கூட இயற்கை ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே தான் செல்கிறது.

    குளிர்ந்து போன சென்னை.. நேற்று சாயங்காலம் முதல்.. நள்ளிரவு வரை.. கொட்டி தீர்த்த கனமழை..!குளிர்ந்து போன சென்னை.. நேற்று சாயங்காலம் முதல்.. நள்ளிரவு வரை.. கொட்டி தீர்த்த கனமழை..!

    ஜெர்மனி வெள்ளம்

    ஜெர்மனி வெள்ளம்

    மேற்கு ஐரோப்பா முழுவதும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த வெள்ளத்தில் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல இடங்கள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கிவிட்டது.

    150 பேர் பலி

    150 பேர் பலி

    இந்த வெள்ளத்தில் சிக்கி குறைந்தபட்சம் 150 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஜெர்மனியிலேயே ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும்கூட ஜெர்மனி தான் இதில் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

    வெறும் 15 நிமிடங்கள்

    வெறும் 15 நிமிடங்கள்

    இது ஜெர்மனியின் ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாகாணத்தில் வசிக்கும் 21 வயதான அக்ரான் பெரிஷா கூறுகையில், "வெறும் 15 நிமிடங்கள் தான். அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. அனைத்து பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளது. எங்கள் பிளாட், அலுவலகம், அண்டை வீடுகள் என அனைத்து இடங்களும் நீரில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் பலரது கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல பெரிய மரங்கள் அப்படியே வேருடன் விழுந்துள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

    ஜெர்மனி

    ஜெர்மனி

    கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான ஒரு வெள்ளத்தைப் பார்த்தது இல்லை என்று ஜெர்மனி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் மட்டும் இந்த வெள்ளத்தால் இதுவரை 108 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து போன்ற அண்டை நாடுகளும் பலத்த மழையால் பாதிக்கப்பட்டு, பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பெல்ஜியம்

    பெல்ஜியம்

    இந்த வெள்ளத்தில் ஜெர்மனிக்கு அடுத்து மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக பெல்ஜியம் உள்ளது. அங்கு வெள்ளத்தால் 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் அதேபோல அங்கு மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 21 ஆயிரம் பேர் இருளில் மூழ்கியுள்ளனர். வரும் நாட்களில் மழை தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    2 மாதங்கள் பெய்ய வேண்டிய மழை

    2 மாதங்கள் பெய்ய வேண்டிய மழை

    சுவிட்சர்லாந்தில், ஒரே இரவில் பெய்த மழையால் அங்குள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீர் அளவு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை வெறும் 48 மணி நேரத்தில் பெய்துள்ளதாகச் சர்வதேச வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல பில்லியின் யூரோ மதிப்பிலான சொத்துகள் நாசமடைந்துள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

    ஜெர்மனி தேர்தல்

    ஜெர்மனி தேர்தல்

    பருவ நிலை மாற்றம் காரணமாகவே இந்தப் புயல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜெர்மனி உள் துறை அமைச்சர் ஹார்ஸ்ட் சீஹோஃபர், வரும் காலத்தில் புயலை எதிர்கொள்ள அதிக கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். ஜெர்மனி நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் முக்கிய பேசுபொருளாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    English summary
    Devastating floods have torn through entire villages and killed at least 150 people in Europe. The severe storms have put climate change back at the centre of Germany's election campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X