கனமழைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.. 20 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்.. திணறும் பாகிஸ்தான்!
இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 1033 பேர் பலியாகியுள்ளதாகவும், 20 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் ஆகியுள்ளதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், மழையினால் மேலும் அந்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து இன்னும் விடாமல் பெய்து வருகிறது

பாகிஸ்தானில் கனமழை
பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர்.

ஒரு நாளில் 116 பேர் பலி
அந்த வகையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 1033 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ளனர். இந்த அசுரத்தனமான மழைக்கு மத்தியில் மீட்பு பணியில் ஈடுபட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. மழை நிவாரண நடவடிக்கைகளை கூட செய்யமுடியாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அவசர நிலை அறிவிப்பு
ஒருசில இடங்களில் வெள்ள மீட்பு பணிகளை ஆய்வு செய்யவும் முடியாத சூழ்நிலையும் நிலவுவதாலும் தொடர்ந்து மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டு வருவதாலும் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை அற்விக்கப்பட்டது. தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பெருத்த சேதங்களை கட்டுப்படுத்த இத்தகைய சூழல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அழிவை விட தற்போது மிக அதிகமாக ஏற்படும் நிலைமை உள்ளது. குறிப்பாக இந்த வார தொடக்கத்தில் பெய்த மழை ஒரு பேரழிவை ஏற்படுத்தும் விதமாகவே தெரிகிறது' என்றார்.

10 லட்சம் வீடுகள் சேதம்
தொடர்ந்து தற்போதும் கனமழை பெய்து வருவதால், பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. சுமார் பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. கிட்டத்தட்ட பாகிஸ்தானில் வசிக்கும் 7 பேரில் ஒருவரது வீடு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கனமழையால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளது. 20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பயிரிடப்பட்ட பயிர்கள் அழிந்து நாசமாகிவிட்டது. இதேபோல் மழை மற்றும் வெள்ளத்தால், 3,451 கிலோமீட்டர் சாலைகள் அழிக்கப்பட்டதாகவும், 149 பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications