For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் மிக உயரமான மனிதரும், குள்ளமான மனிதரும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டால்...

Google Oneindia Tamil News

லண்டன்: கின்னஸ் உலக சாதனை நாளுக்காக லண்டனில் நடத்தப்பட்ட விழாவில் உலகின் மிக உயரமான மனிதரும், மிக குள்ளமான மனிதரும் சேர்ந்து நடந்து வந்து பார்ப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினர்.

பொதுவாக எதிர் எதிர் துருவங்கள் சந்தித்துக் கொண்டாலே, அது வித்தியாசமான நிகழ்வாகத் தான் கருதப்படும். அந்தவகையில், ஒரே இடத்தில் அருகருகே உலகின் மிக உயரமான மனிதரையும், மிக குள்ளமான மனிதரையும் ஒரு சேர பார்க்கும் வாய்ப்பு நேற்று லண்டன் மக்களுக்கு வாய்த்தது.

நேற்று லண்டனில் 60வது கின்னஸ் உலக சாதனைப் புத்தக நாள் விழா கொண்டாடப் பட்டது. மத்திய லண்டனில் உள்ள செண்ட் தாமஸ் மருத்துவமனை வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது. அதில் தான் இந்த சுவாரஸ்ய சந்திப்பு நடைபெற்றது.

லியோனிட் ஸ்டாட்னிக்...

லியோனிட் ஸ்டாட்னிக்...

உலகின் மிக உயரமான ஆண் என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரராக விளங்கிய 8 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த லியோனிட் ஸ்டாட்னிக் சமீபத்தில் காலமானார்.

துருக்கியைச் சேர்ந்த சுல்தான்...

துருக்கியைச் சேர்ந்த சுல்தான்...

அதனைத் தொடர்ந்து, துருக்கி நாட்டைச் சேர்ந்த சுல்தான் கோசென், உலகின் மிக உயரமான ஆண் என்ற பெருமையை மீண்டும் பெற்றார். இவர் 8 அடி, 3 அங்குல உயரம் உடையவர் ஆவார்.

குள்ள மனிதர்...

குள்ள மனிதர்...

இவர், நேற்று ஒரு அடி 7 இன்ச் கொண்ட நேபாள நாட்டைச் சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி என்ற உலகின் குள்ளமான மனிதருடன் சேர்ந்து இந்த போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார்.

உயர வித்தியாசம்...

உயர வித்தியாசம்...

இருவருக்கும் இடையில் சுமார் 7 அடி உயர வித்தியாசம் இருந்த போதும், அதைச் சமாளித்து சாமர்த்தியமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

நண்பர்கள்...

நண்பர்கள்...

இந்த நிகழ்வுக்காக சந்தித்துக் கொண்ட சந்திர பகதூரும், சுல்தானும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்களாம். எனவே, மீண்டும் வேறொரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்தித்துப் பேச வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அன்புக் கட்டளை...

அன்புக் கட்டளை...

மேலும், சந்திர பகதூர் கட்டாயம் ஒரு முறை துருக்கி வந்து செல்ல வேண்டும் என அன்புக் கட்டளையும் விதித்துள்ளாராம் சுல்தான்.

மற்ற சாதனையாளர்கள்...

மற்ற சாதனையாளர்கள்...

இவர்கள் தவிர உலகம் முழுவதும் இருந்து சுமார் ஆறு லட்சம் கின்னஸ் சாதனையாளர்கள் இந்த விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள்.

English summary
The world's tallest man and his counterpart, the world's smallest, have been photographed alongside one another at a special event to commemorate Guinness World Record (GWR) Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X