காதலர் தினத்தில் டேட்டிங் செல்ல முன்கூட்டியே பணம் கட்டி விட்டு காத்திருக்கும் ஹாங்காங் சிங்கிள்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காதலர் தினத்தை கொண்டாட துணை வேண்டுமா?- வீடியோ

  ஹாங்காங்: காதலர் தினத்தில் டேட்டிங் செல்வதற்காக தனியாக இருக்கும் ஆட்களுக்கு இணையை தேடி தரும் ஒரு இடத்தில் பணத்தை செலுத்திவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர் ஹாங்காங் இளசுகள்.

  வரும் 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் காதல் ஜோடிகள் தங்கள் வசதி மற்றும் கலாசாரத்துக்கு ஏற்ப தங்கள் சந்திப்புகளை ஏற்படுத்திக் கொள்வர். பீச், தியேட்டர் செல்வது, ரிசார்ட்களுக்கு செல்வது என்று அமர்க்களப்படும்.

  கடற்கரையோர ரிசார்ட்களில் அறை கூட கிடையாத அளவுக்கு காதல் ஜோடிகள் தஞ்சமடைந்திருப்பர். தங்களுக்கென்று இணை இருப்பவர்கள் சரி, இணையில்லாதவர் என்ன செய்வது? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு நொந்து கொள்ள வேண்டியதுதான்.

  ஆண் பெண் விகிதாச்சாரம்

  ஆண் பெண் விகிதாச்சாரம்

  சீனாவில் ஆண், பெண் விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. 1000 பெண்கள் இருந்தால் 852 ஆண்கள்தான் உள்ளனர். இது மிகவும் குறைவு. இதனால் டீன் ஏஜ் ஆண், பெண்கள் தங்களுக்கென்று துணையில்லாவிட்டாலும் துணையை ஏற்படுத்திக் கொடுக்க ஒரு இடம் உள்ளது.

  ஆப்கள் உண்டு

  ஆப்கள் உண்டு

  காதல் வலையில் சிக்காத பெண்களோ ஆண்களோ காதலர் தினத்தில் தங்கள் இணையை தேடிக் கொள்வதற்கென்று ஒரு நிறுவனம் ஹாங்காங்கில் உள்ளது. இங்கு காதலர் தினத்துக்கு முந்தைய நாள் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும்.

  நேரில் வந்து தேர்வு செய்யலாம்

  நேரில் வந்து தேர்வு செய்யலாம்

  அந்த நிகழ்ச்சிக்கு நேரில் வந்து தங்களுக்கு பிடித்த ஆணுடனோ பெண்ணுடனோ பேசி தங்கள் இணையை தேர்வு செய்துகொண்டு டேட்டிங் சென்றுவிட்டு வரலாம். இது முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இதற்காக 350 ஹாங்காங் டாலரிலிருந்து 450 ஹாங்காங் டாலர் வரை (இந்திய மதிப்பில் ரூ.2800 முதல் ரூ.3600 வரை) செலுத்த வேண்டும். ஆப்களை டவுன்லோடு செய்துகொண்டும் பிடித்த நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். எனினும் நேரில் பார்த்து தேர்வு செய்யவே ஹாங்காங் இளசுகள் விரும்புகின்றனர்.

  தாமத திருமணம்

  தாமத திருமணம்

  ஹாங்காங்கில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 911 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்றிருந்த நிலை மாறி 852 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்ற நிலை வந்துள்ளது. மேலும் ஆண்கள் தங்களது 31-ஆவது வயதில்தான் திருமணம் செய்து கொள்கின்றனர். பெண்கள் 26 வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர். கடந்த 33 ஆண்டுகளில் குழந்தையின்மையிலும் ஒரு சரிவு உள்ளது. கடந்த 1981-களில் 86,751 குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2014-இல் 62,305 குழந்தைகளே பிறந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A growing gender imbalance in city means single women here are increasingly willing to spend money on the search for a special someone – potentially big business for matchmakers, who say the scene is now attracting more well-educated clients.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற