சொகுசு கப்பலை தாக்கிய சவுதி.. நடுக்கடலில் தவித்த 14 இந்தியர்களை மீட்டுள்ளோம் – ஹவுதிகள் அறிவிப்பு
சனா: சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் செங்கடல் பகுதியில் 14 இந்தியர்கள் பயணித்த சொகுசு கப்பல் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியதாகவும், 14 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டதாகவும் ஹவுதிகள் அறிவித்துள்ளனர்.
இதுபற்றி ஏமன் ஹவுதி அமைப்பினர் செய்தி தொடர்பாளர் யஹியா சரீ கூறுகையில், ''எதிரி சவுதி அரேபியா செங்கடலில் ஸிகர் தீவின் அருகே 14 இந்தியர்களுடன் பயணித்த சொகுசு கப்பல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. 14 பேரையும் நாங்கள் பத்திரமாக மீட்டுள்ளார். இதுதொடர்பாக கூடுதல் விபரங்கள் பிறகு தரப்படும்.

இந்த தாக்குதல் என்பது செங்கடல் வழியாக நடக்கும் சர்வதேச கப்பல் பயணத்தை அச்சறுத்தும் வகையில் மேற்கெள்ளப்பட்டுள்ளது. இந்த நடத்தையை நிறுத்தும்படி சர்வதேச அமைப்புகள் எதிரி சவுதி அரேபியாவிற்கு அறிவுரை வழங்க வேண்டும்'' என கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியா மற்றும் ஹவுதிகள் சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதலை நம் நாடு கண்டித்து இருந்தது. இருதரப்பும் பேச்சுவார்த்தை வழியாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தது.
அதுமட்டுமின்றி நேற்று சவுதி அரேபியா மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 இந்தியர்கள் காயமடைந்து இருந்தனர். சவுதி அரேபியாவின் தம்மம் நகரில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ளவர்களுக்கு மரத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் ஷைபா எண்ணெய் வயல் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது அதனை சவுதி அரேபியாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தின. இருப்பினும் இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதோடு, 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் இந்தியர் ஆவார்.
இப்படியாக சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதலில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது. இதற்கிடையே தான் செங்கடல் பகுதியில் 14 இந்தியர்கள் பயணித்த சொகுசு கப்பலை சவுதி அரேபியா குறிவைத்து தாக்கியதாகவும், ஹவுதிகள் 14 இந்தியர்களையும் காப்பாற்றி உள்ளதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
