யூத நாடு இஸ்ரேலில் அரபு கட்சிகள் 19 இடங்களில் வென்றது எப்படி? நெதன்யாகுவிற்கு சிக்கல் வந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகள் கிங்மேக்கராக மாறி உள்ளன. இஸ்ரேல் என்பது யூத நாடாக உள்ள நிலையில் அங்கு எப்படி இஸ்லாமிய கட்சிகள் 19 இடங்களை கைப்பற்றியது என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது. அது எப்படி சாத்தியமானது? அரபு கட்சிகள் வென்ற 19 இடங்கள் எப்படி நெதன்யாகுவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

how-did-an-arab-parties-win-19-seats-in-the-jewish-israel-how-trouble-arose-for-netanyahu-details

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 120 இடங்களில் 61 இடங்களை கைப்பற்றினால் ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி, கூட்டணி மெஜாரிட்டியும் கிடைக்கவில்லை.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 53 இடங்களும், 'யாஷர்' கட்சியின் காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கு 48 இடங்களும், அரபுகட்சிகளுக்கு 19 இடங்களும் கிடைத்துள்ளன.

பிரதமர் பதவியின் மீது பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காடி ஐசன்கோட் ஆகியோர் கண்வைத்துள்ளனர். ஆனால் பெரும்பான்மை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்கள் 2 பேருக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு அரபு கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தான். இந்த கட்சிகளிடம் 19 இடங்கள் உள்ளதால் இருவரில் யார் கூட்டணி வைத்தாலும் எளிதாக அரியணை ஏறி பிரதமராக அமர முடியும்.

ஆனால் அவர்கள் 2 பேரும் அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயங்கி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் யூதர்கள் என்பதும், ஒருவேளை கூட்டணி வைத்து பிரதமரானால் அடுத்த தேர்தலில் யூத மக்கள் தங்களை புறக்கணிக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். இப்படியாக இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் முடிவு இடியாப்ப சிக்கலை கொடுத்துள்ளது.

இந்நிலையில் தான் தற்போது பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல் யூத நாடாக உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்லாமிய நாடுகளுடன் மல்லுக்கட்டும் இஸ்ரேலில் எப்படி அரபு கட்சிகள் 19 இடங்களில் வென்றன? என்ற வினா எழுந்துள்ளது. இதற்கு பதில் அறிய வேண்டும் என்றால் இஸ்ரேல் மக்கள்தொகை பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

இஸ்ரேலை யூத நாடு என்று சொன்னாலும் கூட அங்கு கணிசமான அளவுக்கு இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.
இஸ்ரேலின் மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் டேட்டாப்படி 2026 ஏப்ரல் நிலவரப்படி அந்த நாட்டில் குறைந்தது 21.57 லட்சம் இஸ்லாமியர்கள் உள்ளன. இது இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகையில் 21.1 சதவீதமாகும்.

இவர்களில் பெரும்பாலோர், 1948-ஆம் ஆண்டு போருக்குப் பிறகும் இஸ்ரேலுக்குள்ளேயே தங்கிவிட்ட பாலஸ்தீனியர்கள் ஆவார்கள். இவர்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர். இஸ்ரேலின் ஜெருசலேமில் அதிகமான இஸ்லாமியர்கள் உள்ளனர். அங்குள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர வடக்கு, மத்திய மற்றும் நிகெவ் பிராந்தியத்திலும், நாசரேதத், உம் அல் பஹம் மற்றும் ரஹத் உள்ளிட்ட இடங்களிலும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். விகிதாசார பிரதிநிதித்துவ முறையை பின்பற்றும் இஸ்ரேலில், ஒரு கட்சி பெறும் வாக்குகளின் சதவீதத்தை பொறுத்தே அந்த கட்சிக்கு நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதனால் இஸ்லாமிய மக்களின் ஓட்டுகள் தேர்தலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த இஸ்லாமிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல சிறிய அரபு கட்சிகள் இணைந்து 'தி ஜாயிண்ட் லிஸ்ட்' என்ற பெயரில் கூட்டணி வைத்துள்ளன.இந்த கூட்டணிக்கு யூசெஃப் ஜபரின் தலைமை வகிக்கிறார். இந்த 'தி ஜாயிண்ட் லிஸ்ட்' கூட்டணி 12 இடங்களை கைப்பற்றி உள்ளது.

இன்னொரு கட்சியின் பெயர் 'ராம்'. இதனை பொதுவாக இஸ்லாமிய கட்சி என்பார்கள். இதற்கு மன்சூர் அப்பாஸ் தலைமை தாங்குகிறார். இந்த கட்சி 7 இடங்களை கைப்பற்றி உள்ளது. பொதுவாக இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குரிமை பெற்றிருந்தாலும் இஸ்லாமியர்கள் பெரிய அளவில் வாக்களிப்பது இல்லை. தேர்தலை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை. பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் அவர்கள் கோபமடைந்தனர். எப்படியாவது பிரதமர் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து ஆர்வமாக தேர்தலில் வாக்களித்தனர். இஸ்ரேலில் வாக்குரிமை பெற்ற இஸ்லாமியர்களில் சுமார் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

இதுதான் இஸ்ரேலில் அரபு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சாதகமாக மாறி உள்ளது. இதற்கு முன்பு இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் அரபு கட்சிகள் அதிகபட்சமாக 15 இடங்களை வென்ற நிலையில் இந்த முறை முதல் முறையாக 19 இடங்களை கைப்பற்றி உள்ளது. இந்த அரபு கட்சிகளின் எழுச்சி என்பது தற்போதைய பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணிக்கு பல இடங்களில் கிடைக்க வேண்டிய வெற்றிக்கு செக் வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது பிரதமர் பதவி மீது கண்வைத்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு, காடி ஐசன்கோட் ஆகியோர் அந்த பதவியை எட்டிப்பிடிக்க வேண்டும் என்றால் 2 அரபு கட்சிகளின் ஆதரவை பெறுவது கட்டாயம். இல்லாவிட்டால் மீண்டும் தேர்தலை நோக்கி செல்ல வேண்டும் என்பது தான் இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் முடிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+