For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரியல் ஜேம்ஸ்பாண்ட்..முன்னாள் “உளவாளி” விளாடிமிர் புடின்.. உலகம் உச்சரிக்கும் பெயராய் மாறியது எப்படி?

Google Oneindia Tamil News

மாஸ்கோ : "விளாடிமிர் புடின்" வாஷிங்டன் முதல் நம்ம ஊர் வாடிப்பட்டி வரை தற்போது உலகம் முழுவதும் உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயர். ரஷ்யா எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்க புதின் என்னும் ஆளுமை உக்ரைன் எனும் சிறு குழந்தையை வைத்து ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார். முன்னாள் உளவாளியான ஒரு நபர் உலகின் சக்திமிக்க ஒரு அதிகார மையமாக மாறியது எவ்வாறு..

உலகத்தை உற்று நோக்காது உலகத்தையே உற்றுநோக்க வை.. இந்த வரிகள் யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பொருந்தும். 2020 ஆம் ஆண்டு புதின் எழுதிய கட்டுரையில் ரஷ்யாவின் மகுடமே உக்ரைன் என குறிப்பிட்டிருந்தார்.

செல்வ வளமும் இயற்கை வளமும் குவிந்து கிடக்கும் உக்ரைனை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கனவு புடினுக்கு பல ஆண்டுகளாக மனதின் அடி ஆழத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது.

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவை அனுப்ப விளாடிமிர் புடின் தயார் - ரஷ்ய தூதரகம் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவை அனுப்ப விளாடிமிர் புடின் தயார் - ரஷ்ய தூதரகம்

உக்ரைன் விவகாரம்

உக்ரைன் விவகாரம்

உக்ரைனுக்கு தலைவலி ரஷ்யா மூலம் வரவில்லை நேட்டோ மூலம் வந்தது. சோவியத் யூனியனிலிருந்து உடைந்து சிதறிய சிறு பாகமான உக்ரைன் தனது நாட்டில் கொட்டி கிடக்கும் வளங்கள் காரணமாக பல துறைகளில் முன்னணியில் உள்ளது. தங்களை நேட்டோ அமைப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கரம் நீட்டின. ஆனால் உணவில் சேர்க்கக்கூடாது என கூறிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டுக்கு எதிராக காய் நகர்த்தத் தொடங்கினார்.

அவதிக்குள்ளான மக்கள்

அவதிக்குள்ளான மக்கள்

புலி வருது கதையாக எல்லையில் படைகளைக் குவித்து காத்துக்கொண்டிருந்த புடின் அந்நாட்டின் மீது எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம் என கருதப்பட்டது. அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எவ்வளவோ முயன்றும் ரஷ்யா எனும் அதிகார பலம் கொண்ட குதிரைக்கு கடிவாளம் போட முடியவில்லை. எண்ணி பயந்தது போலவே ரஷ்யாவின் ராணுவ துருப்புகள் உக்ரைன் நாட்டின் மீது குண்டு மழை பொழிந்தனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து தங்கள் உடைமைகளையும் உயிரையும் காத்துக் கொள்ள நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

சிறுகுழந்தை பயமறியாது என்பது போல சரணடையும் பேச்சுக்கே இடமில்லை ஒன்று வெற்றி இல்லையேல் மரணம் என்ற ரீதியில் உக்ரைன் வீரர்கள் உக்கிரமாக களத்தில் உள்ளனர். ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியும் தங்கள் நாட்டின் மீது அன்னியர் ஒருவர் ஆக்கிரமிப்பதை விரும்பாத அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஒரு ராணுவ வீரராக களமிறங்கி களமாடி வருகிறார். அது சரி ஒரு சாதாரண உளவாளியாக பணியாற்றிய 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகார மையமாக திகழ்வது எவ்வாறு என்பது குறித்து பார்ப்போம்.

ரஷ்ய உளவாளி

ரஷ்ய உளவாளி

1952ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்தவர் விளாடிமிர் புடின். 1975 ஆம் ஆண்டு ரஷ்யாவின் அதிகாரமிக்க உளவு அமைப்பாக கருதப்படும் கேஜிபியில் இணைந்தார். அமெரிக்காவின் சிஐஏ, இந்தியாவின் ரா போன்று இல்லாமல் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் ரஷ்யாவின் கேஜிபி அமைப்பால். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் அதில் பணியாற்றிய புடின் 1990ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யாவின் அரசு பணியில் இணைந்து கொண்டார்.

 ரஷ்யாவின் அதிபர்

ரஷ்யாவின் அதிபர்

தனது வீரதீர மிக்க புத்திக்கூர்மை செயல்பாடுகளால் அரச உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்றவர். அதன்பிறகு அசுர வளர்ச்சி கண்டு பிரதமராக பதவி வகிக்கும் அளவுக்கு உயர்ந்தார். ரஷ்யாவின் அதிபராக போரிஸ் யெல்ட்சின் பொறுப்பு வைத்தபோது அந்த நாட்டின் பிரதமராக ஒரு ஆண்டுகாலம் புடின் இருந்தார். அதனைத் தொடர்ந்து அசாத்திய நகர்வுகள் மூலம் 2000ஆண்டு ரஷ்யாவின் அதிபரான அவர் அப்போது இருந்து தற்போது வரை 20 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யாவை தன் விரல் நுனியில் வைத்துள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த நபர்

உலகின் சக்திவாய்ந்த நபர்

ரஷ்ய அரசியலமைப்பின்படி அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வைக்கலாம். இதை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமித்ரி மெத்வதேவ்ஐ அதிபர் ஆக்கிய புடின் ரஷ்ய பிரதமராக பதவி வகித்தார். தொடர்ந்து தனது ரஷ்யாவை தனது கட்டுபாட்டில் வைத்திருந்தவர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபராக பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கிரிமியாவை ரஷ்யாவில் ஐக்கியமானார். 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் உலகின் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப் பட்டார்.

விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின்

அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என புடின் முடிவு செய்ததாக 2017ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டு நிலையில் அப்போது அமெரிக்க அதிபரானார் ட்ரம்ப். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவின் அதிபராக நான்காவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார் . 2020ஆம் ஆண்டு அரசியல் அமைப்பை மாற்றிக் காட்டினார் புடின். பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னிடம் அதிகாரம் இருக்கும் வகையில் திருத்தம் மேற்கொண்டார். ஒரு தனிநபர் ஒரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க முடியும் என்றால் அது கூடினால் மட்டுமே.

Recommended Video

    Russia-வுக்கு எதிராக ஓட்டுப்போடாத India, China | UN Security Council | Oneindia Tamil
     மாபெரும் சாம்ராஜ்யம்

    மாபெரும் சாம்ராஜ்யம்

    ரஷ்யா எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்க புதின் முயல்வதாக அமெரிக்காவின் உளவு அதிகாரிகள் தகவல் அளித்தனர். அதைப்போலவே தற்போது ரஷ்யாவில் உக்ரைனை ஒரு அங்கமாக இணைத்துக் கொள்ள முயன்று இருக்கிறார். கிரிமியா போன்று தற்போது ரஷ்யா எனும் ஆக்டோபஸின் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது உக்ரைன், என்ன நடக்கப்போகிறது என்பதை உலகம் உற்று நோக்கி கவனித்துக் கொண்டிருக்கிறது, விடியும் பூமி அமைதிக்காக விடியவே.

    English summary
    "Vladimir Putin" is a name that is now pronounced all over the world, from Washington to our hometown Vadipatti. Putin, the ruler of Russia, is playing tricks on Ukraine to create an empire called Russia. How a former spy became a powerful center of power in the world
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X