சரியான வாய்ப்பு.. டிரம்பை வைத்து மோடி நகர்த்தும் காய்கள்.. ஹவுடி மோடிக்கு பின் அதிரடி திட்டம்!
Recommended Video
டெக்ஸாஸ்: அமெரிக்காவில் நடக்க உள்ள ஹவுடி மோடி விழா பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக பெரிய பலனை ஏற்படுத்தி கொடுக்க போகிறது என்று கூறுகிறார்கள்.
பலரும் எதிர்பார்க்கும் ஹவுடி மோடி விழா இன்று நடக்கிறது. அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் ஹவுடி மோடி விழா இன்று மாலை நடக்க உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் சேர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டெக்ஸாஸ் இந்தியா போரம் என்ற அமைப்பு மூலம் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோடி
முதலில் இந்த விழாவில் மோடி மட்டுமே கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசியில் இதில் டிரம்பையும் கலந்து கொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் தரப்பு கொஞ்சமும் யோசிக்காமல் உடனே ஒப்புக்கொண்டது.

எப்படி முக்கியம்
பிரதமர் மோடியின் இந்த திட்டத்திற்கு பின் முக்கிய காரணம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆம், ஹவுடி மோடி விழாவிற்கு டிரம்ப்பை வரவழைத்தது பிரதமர் மோடியின் ராஜதந்திரம் என்கிறார்கள். தற்போது காஷ்மீர் பிரச்சனை மிகவும் உச்சத்தில் இருக்கிறது. இதில் உலக நாடுகள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிற்கு எதிராக நிற்கலாம்.

சீனா
ஆம் சீனா எப்போது காஷ்மீர் பிரச்சனையை கையில் எடுத்து பெரிதாக்கலாம் என்று யோசித்து வருகிறது. பாகிஸ்தான் சர்வதேச அளவில் காய் நகர்த்த முயன்று வருகிறது. இந்த இரண்டு நாடுகளையும், மற்ற சில நாடுகளையும் மொத்தமாக சமாளிக்க மோடி எடுத்திருக்கும் ஆயுதம்தான் அமெரிக்கா என்கிறார்கள்.

ஏன் நெருக்கம்
அமெரிக்காவுடன் எவ்வளவு நெருக்கம் ஆக முடியுமோ அவ்வளவு நெருக்கமாக மோடி முடிவு செய்துள்ளார். அதனால்தான் இன்று அவர் டிரம்ப்பை ஹவுடி மோடி விழாவிற்கு அழைத்தார் என்று கூறுகிறார்கள். காஷ்மீர் பிரச்சனையில் இதனால் இந்தியாவின் கை மீண்டும் ஓங்கும் என்கிறார்கள். அமெரிக்காவை இந்தியா பாதுகாப்பு அரணாக பயன்படுத்த போகிறதாம்.

சரிவு
இதுமட்டுமில்லாமல் இந்தியாவின் பொருளாதார சரிவுக்கு இது ஒரு வகையில் கை கொடுக்கும். பொருளாதார சரிவு குறித்த செய்திகளை மக்கள் சில நாட்களுக்கு கவனிக்க மாட்டார்கள். டிரம்ப், மோடியின் விழாவில் கலந்து கொள்வது, பொருளாதார சரிவு குறித்த செய்திகளை திசை திருப்பும். இது தனது பெயரை காக்கும் என்று மோடி நினைக்கிறார்.

தேர்தல்
அதேபோல், மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல்களில் பிரதமர் மோடி இதை பற்றி பேச முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். இந்த டிரம்ப் - மோடி கூட்டத்தை, பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தும். இதை வைத்து பாஜக மிகப்பெரிய அரசியல் அதிரடியை பிளான் செய்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார்கள். மிக சாதாரண விழாக்களை கூட மோடி, அரசியல் நிகழ்வாக மாற்றியது உண்டு.. அப்படி இருக்கையில் இவ்வளவு பெரிய விழாவை கண்டிப்பாக பெரிய அரசியல் நிகழ்வாக மோடி மாற்றுவார் என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள்.
-
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications