அண்டார்டிகா அருகே 7.5 ரிக்டர் நிலநடுக்கம்.. அதிர்ந்தது அர்ஜன்டினா, சிலி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அண்டார்டிகா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 7.5 ஆக இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அர்ஜென்டினாவின் டியரா டெல் பியூகோ மற்றும் சிலி நாட்டின் பல பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அங்கு பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Huge Earthquake hits close to Antarctica

பூகம்பத்தின் மையப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதிப்பு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை முழுவிவரம் தெரியவில்லை. இருப்பினும் பூகம்பத்தின் மையப் பகுதிக்கு அருகாமையில் பிரிஸ்டல் தீவும், தெற்கு சான்ட்விச் தீவுகளும்தான் உள்ளன. இங்கு பெரிய அளவில் கட்டடங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சிலி நாட்டில் நிலநடுக்கம் வெகுவாக உணரப்பட்டுள்ளது. அதேபோல அர்ஜென்டினாவின் டியரா டெல் பியூகோ நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+