For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கர்.. கிறிஸ்துவத்தை பரப்ப மர்ம தீவிற்கு சென்றாரா?

அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் அங்கு கிறிஸ்துவ மதத்தை பரப்ப ஆசைப்பட்டு சென்றதாக பரபரப்பு கடிதம் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அந்தமான் தீவிற்குள் நுழைந்த நபர், கொடுமைப்படுத்தி கொன்ற சென்டினேலீஸ் ஆதிவாசிகள்!- வீடியோ

    சென்டினல்: அந்தமான் தீவுகளில் சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் அங்கு கிறிஸ்துவ மதத்தை பரப்ப ஆசைப்பட்டு சென்றதாக பரபரப்பு கடிதம் வெளியாகி உள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் என்ற நபர் அந்தமான் தீவுகளில் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மனிதர்களின் வருகையை விரும்பாத சென்டினேலீஸ் ஆதிவாசிகள் அவரைக் கொலை செய்து இருக்கிறார்கள்.

    இது தொடர்பான புதிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    அடக்கொடுமையே.. ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்புக்கு காரணம் ஒரு ஃபேக்ஸ் மெஷினா? அடக்கொடுமையே.. ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்புக்கு காரணம் ஒரு ஃபேக்ஸ் மெஷினா?

    கொன்றனர்

    கொன்றனர்

    அந்தமானில் இருக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்கள் வெளி உலகுடன் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இத்தனை வருடங்களாக உயிர் வாழ்ந்து வருகிறார்கள். சென்டினேலீஸ் மக்கள், தங்கள் தீவிற்குள் வரும் பிற மனிதர்களை விடுதலை செய்ய மாட்டார்கள். கடந்த வாரம் அந்தத் தீவிற்குள் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஒரு வாரம் முன் சிறைபிடிக்கப்பட்ட அவர் கொடூரமாக கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    கடிதம் கிடைத்தது

    கடிதம் கிடைத்தது

    இந்த நிலையில் கொல்லப்பட்ட ஜான் ஆலன் எழுதிய கடிதம் ஒன்று அமெரிக்க நாளிதழ்களில் வெளியாகி உள்ளது. அந்த தீவிற்கு செல்லும் முன் ஜான் ஆலன் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தை, அந்தமான் மீனவர்கள் தற்போது ஜான் ஆலன் குடும்பத்திடம் சேர்த்து இருக்கிறார்கள். இதனுடன் டைரி ஒன்றும் இருந்துள்ளது.

    விளக்கம் கிடைத்து இருக்கிறது

    விளக்கம் கிடைத்து இருக்கிறது

    அந்த கடிதத்தில் ஜான் ஆலன், ''நான் இங்கே வருவதை வைத்து நீங்கள் என்னை பைத்தியக்காரனாக நினைக்கலாம். ஆனால் இயேசு மீது உள்ள அன்பு காரணமாகத்தான் நான் இங்கு வந்தேன். இயேசுவை வழிபடுவது குறித்து நான் இவர்களிடம் தெரிவிக்க போகிறேன். வேறு ஒரு புதிய மொழியில் அவர்கள் இயேசுவை வழிபட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். அவர்களிடம் கிறிஸ்துவத்தின் மகிமையை தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்று எழுதியுள்ளார்.

    டைரி இருந்தது

    டைரி இருந்தது

    மேலும் அவர் சிறைபிடிக்கப்பட்ட நவம்பர் 15ம் தேதி அன்று நடந்த சம்பவங்கள் குறித்தும் டைரியில் எழுதியுள்ளார். அன்றுதான் அவர் ஆதிவாசிகளால் பிடிக்கப்பட்டார். அன்று இவரது கப்பலை துரத்திக் கொண்டு ஆதிவாசிகள் வந்ததாகவும், வில்லால் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும் ஜான் எழுதி உள்ளார். இந்த டைரியும், கடிதமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    I went to Sentinelese to preach Christianity says John who got killed by the tribe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X