For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஸ்கீரிம் விற்று குடும்பத்தைக் காப்பாற்றும் 8 வயது சிறுமி!

Google Oneindia Tamil News

ஹெராட்: ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரை சேர்ந்த 8 வயது சிறுமி தனது குடும்பத்தை காப்பாற்ற ஐஸ்க்ரீம் விற்று சம்பாதித்து வருகிறார்.

பாத்திமா எனும் அந்த சிறுமி, காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் ஐஸ்க்ரீம் விற்று வருகிறார்.

வறுமை காரணமாக பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில் உள்ள பாத்திமா தனது தந்தை, தாய், தந்தையின் மற்றொரு மனைவி மற்றும் 5 சகோதரிகளுக்காக கடுமையாக உழைக்கிறார்.

Ice cream is a job, not a treat, for this Afghan girl

பாத்திமாவின் தந்தை நான்கு வருடங்களுக்கு முன் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கு முன் தினக்கூலியாக வேலை செய்து வந்தார். இப்போது அவருக்கு உடல்நலம் குன்றியதை அடுத்து குடும்பத்தை காப்பாற்றவேண்டிய கட்டாயம் பாத்திமாவிற்கு ஏற்பட்டது.

இந்நிலையில் ஒரு மொத்த வியாபாரியிடமிருந்து ஐஸ்க்ரீம்களை வாங்கி, அவற்றை சிறிய தள்ளுவண்டியில் வைத்து விற்றுவரும் பாத்திமா, தனக்கு பள்ளிக்கு செல்ல ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "எனது ஒரே பெரிய கனவு என்னிடம் பணம் இருக்கவேண்டும் என்பது தான். அப்போதுதான் நான் வேலைக்கு செல்லாமல் பிற சிறுமிகள் போல பள்ளிக்கு செல்ல முடியும்.

நான் பள்ளி வாசலில் ஐஸ்க்ரீம் விற்கும் போது மற்ற சிறுமிகள் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்வதை பார்த்தால் எனக்கும் அதே போல பள்ளிக்கு செல்ல வேண்டுமென ஆசையாக இருக்கும். எனக்கு ஏழையாக இருக்க பிடிக்கவேயில்லை. எனக்கு ஐஸ்க்ரீம் பிடிக்கும் என்றாலும், என்னால் அதை வாங்கி கூட சாப்பிட முடியாது" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

யூனிசெப் அளித்துள்ள தகவலின் படி, ஆப்கானிஸ்தானில் 7 வயது முதல் 14 வயது வரை உள்ள 17 சதவீத சிறுமிகள் குழந்தை தொழிலாளிகளாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The gaggle of girls outside a school in Herat are all about the same age, but one of them sticks out.Fatima, eight, isn't wearing a neat black and white uniform, or laughing and playing with classmates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X