காய்ச்சல் பாதித்த பெண் ஊழியர்.. விடுப்பு தராத HR-க்கு நிறுவனம் தந்த ஷாக்! இனி கனவிலும் மறக்கமாட்டார்
பெய்ஜிங்: சீனாவில் காய்ச்சலால் பாதிககப்பட்ட பெண் ஊழியர் ஒருவர் ஒரு மணிநேரம் பெர்மிஷன் கேட்டதற்கு எச்ஆர் அனுமதி மறுத்தார். அதுமட்டுமின்றி ‛‛நீ பலவீனமாக இருக்கிறாரய். இந்த காய்ச்சாலை கூட தாங்க முடியாதா? இதனால் உன் மூளை என்ன கருகி போய் விட்டதா? மாதவிடாய் நின்று விட்டதா?'' என்று திட்டி அவமானப்படுத்தி உள்ளார். இதுதொடர்பான ஆடியோ இணையதளங்களில் வெளியான நிலையில் அந்த எச்ஆர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சில அலுவலகங்களுக்கு ஊழியர்களுக்கு கேட்டவுடன் விடுமுறை கிடைத்து விடும். அதேவேளையில் ஒரு சில அலுவலகங்களில் விடுப்பு ஊழியர்களுக்கு கிடைப்பது இல்லை. குறிப்பாக உடல்நல பிரச்சனையை சொன்னால் கூட சில நிறுவனங்கள் அதனை கண்டு கொள்வது இல்லை.

உடல்நிலை சரியில்லை என்றாலும் பரவாயில்லை. அலுவலகம் வந்து செல்லுங்கள். விடுப்பு என்பது கிடையாது என சில நிறுவனங்களின் மேலாளர்கள், எச்ஆர் சொல்வது உண்டு. இதனால் பல ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். நம்மில் பலரும் கூட இப்படியான சூழலை எதிர்கொண்டு இருப்போம்.
இப்போது சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நிறுவனத்தில் பெண் ஒருவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் அனலாக கொதித்தது. 37.9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு காய்ச்சல் இருந்தது. அவரால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. இதனால் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்க நினைத்தார்.
இதையடுத்து அலுவலகத்தின் பெண் எச்ஆரிடம் அவர் ஒரு மணிநேரம் ‛பெர்மிஷன்' கேட்டார். ஆனால் எச்ஆர் அவருக்கு ‛பெர்மிஷன்' கொடுக்கவில்லை. அவரை கடுமையாக திட்டினார். ‛‛ நீ ரொம்ப வீக்காக இருக்கிறாய். 38 டிகிரி காய்ச்சலை உன்னால் தாங்க முடியாதா? இந்த காய்ச்சலால் உனது மூளை என்ன கருகிப்போய்விட்டதா? அல்லது மாதவிடாய் நின்று விட்டதா? இதனால் லீவு கேட்கும் முன்பு யோசிக்க வேண்டும்'' என்று திட்டினார்.
இதையடுத்து அந்த பெண் பணியாளர் விடுப்பு எடுக்கவில்லை. தொடர்ந்து அவர் தனது ஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்றினார். ஆனாலும் கூட எச்ஆரின் தொல்லை முடிவுக்கு வரவில்லை. ‛பெர்மிஷன்' கேட்ட ஊழியரை மீண்டும் சீண்டினார் எச்ஆர். அப்போது ‛‛நீங்கள் லீவ் எடுத்தீர்கள். ஆனால் சரியாக வேலை செய்யவில்லை. உங்களின் செயலும், உங்களின் வார்த்தைகளும் இணக்கமாக இல்லை. நீங்கள் மனநல ஆலோசகரை போய் பார்க்க வேண்டும்'' என்று கூறி மீண்டும் திட்டினார்.
இதனால் பெண் பணியாளர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுதெடார்பான ஆடியோவை பெண் பணியாளர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதனை கேட்ட பலரும் எச்ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நிறுவனம் எச்ஆரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications