கர்ப்பிணி-தாய்மார்களே உஷார்.. தாய்ப்பாலில் கலந்த மைக்ரோ பிளாஸ்டிக்.. ஆராய்ச்சியில் அதிர்ச்சி முடிவு

Subscribe to Oneindia Tamil

ரோம்: உலகில் முதல் முறையாக தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த சுகாதாரத்துறை நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த அதிர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அந்த ஆராய்ச்சி எச்சரித்துள்ளது.

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியமானதாகும். தாய்ப்பால் என்பது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அதோடு குழந்தைகள் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து விடுபட தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்கு, நெஞ்சக சளி, காது வலி, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளை தாய்ப்பால் காப்பாற்றுகிறது.

இத்தாலியில் ஆய்வு

இத்தாலியில் ஆய்வு

இந்நிலையில் தான் தாய்ப்பாலின் தரம் தொடர்பாக இத்தாலியில் சுகாதாரத்துறை நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சி என்பது மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பான ஆராய்ச்சியாகும். இதற்காக குழந்தைகள் பிறந்த ஒரு வாரத்தை கடந்த 34 தாய்மார்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் உறுதி

மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் உறுதி

இந்த ஆராய்ச்சி முடிவுகள் காடியன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாலிதீன், பிவிசி எனும் பாலிவினைல் குளோரைடு மற்றும் பாலிப்ரோப்பிலீன் ஆகியவற்றால் ஆன மைக்ரோபிளாஸ்டிக்கள் தாய்ப்பாலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது 75 சதவீத தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் என்பது 5மிமீ நீளத்துக்குள் இருக்கும் சிறிய வகையிலான பிளாஸ்டிக் தூசியாகும்.

 விரிவான ஆராய்ச்சி தேவை

விரிவான ஆராய்ச்சி தேவை

இருப்பினும் தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பது என்பது குழந்தைகளின் உடல் நலனை பாதிக்கலாம். இதனால் இதுபற்றி விரிவான ஆராய்ச்சி தேவை என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியில் பங்கெடுத்த தாய்மார்கள் பிளாஸ்டிக் பொட்டலங்களில் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு குளிர்பானங்களை பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமின்றி மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் உள்ள கடல்வாழ் உயிரினங்களையும் சாப்பிடுவதோடு, பிளாஸ்டிக்கில் வழங்கப்படும் சுகாதாரம் சார்ந்த பொருட்களையும் அவர்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இருப்பினும் தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பதற்கும் இதற்கும் உள்ள தொடர்புகள் நிரூபிக்கப்படவில்லை. மேலும் தற்போது சுற்றுச்சூழலில் அனைத்து இடங்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் தூசிகள் பரவி உள்ளன. பெண்கள் அனைவரும் பல இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் வரும் காலத்தில் இது இயல்பானதாக மாறலாம்.

தாய்ப்பால் கொடுப்பது அவசியம்

தாய்ப்பால் கொடுப்பது அவசியம்

இதுபற்றி இத்தாலி அன்கோனாவில் உள்ள யுனிவர்சிட்டா பாலிடெக்னிகா டெல்லே மார்ச்சி டாக்டர் வாலண்டினா நோட்டார்ஸ்டெபனோ கூறுகையில், ‛‛தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதற்கான ஆதாரங்கள் ஆராய்ச்சி மூலம் கிடைத்துள்ளன. இதனால் குழந்தைகளின் நலனை அக்கறையுடன் கருத்தில் கொள்ள வேண்டும். கர்ப்பம் தரிக்கும் போதும், பாலூட்டும் காலங்களிலும் தாய்மார்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் வெளியில் செல்வதை தவிர்ப்பதோடு தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் அளவை குறைக்கும் வழிமுறைகளை தாய்மார்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாசுக்கான மைக்ரோபிளாஸ்டிக்களால் ஏற்படும் தீமைகளை விட தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் அதிகம் என்பதை தாய்மார்கள் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானதாகும்.

முந்தைய ஆய்வு முடிவுகள் என்ன?

முந்தைய ஆய்வு முடிவுகள் என்ன?

மேலும் முந்தைய கார்டியன் ஆய்வு முடிவின்படி புட்டியில் பால் குடிக்கும் குழந்தைகள் ஒரு நாளில் ஏராளமான மைக்ரோ பிளாஸ்டிக்கை விழுங்க கூடும் எனவும், பசுவின் பாலில் கூட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பிளாஸ்டிக் இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தாய்மார்கள் பிளாஸ்டிக், அழகு சாதனை பொருட்கள், பல் துலக்கும் பேஸ்ட்கள், அதிநவீன செயற்கை முறையால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவு, குளிர்பானங்களை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்'' என கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்பு நடந்த ஆராய்ச்சியில் மனித உயிரணுக்கள், விலங்குகள் மற்றும் கடல் உணவுகளில் நச்சு ஏற்படுத்தும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் தற்போது தான் தாய்ப்பாலிலும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பதை ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+