தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 130 வது இடம்!
வாஷிங்டன்: உலக நாடுகளில் தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 12 இடங்கள் முன்னேறி 130-வது இடத்தை பிடித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தொழில் முதலீடு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சியின் பயனாக தொழில் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளன. அதன்படி தொழில் முதலீடு மற்றும் அதன் தொடர்பான விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கடந்த ஆண்டு இந்தியா செய்துள்ளது.

உலக நாடுகளில் தொழில் முதலீடு மற்றும் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளின் நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி 189 நாடுகளின் பட்டியலில் கடந்த ஆண்டு 142வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 12 இடங்கள் முன்னேறி 130 வது இடத்தை பிடித்துள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து, டென்மார்க், தென்கொரியா, ஹாங்காங், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. சீனா 84வது இடத்திலும், பாகிஸ்தான் 134 வது இடத்திலும் உள்ளது.












Click it and Unblock the Notifications