1999ம் ஆண்டு இந்திய ஏர்லைன்ஸ் விமான கடத்தல் ஞாபகம் இருக்கா.. முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் படுகொலை
இஸ்லாமாபாத்: 1999ம் ஆண்டு நடந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தல் சம்பவத்தில், ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான ஜஹூர் இப்ராஹிம் எனப்படும் ஜமாலி பாகிஸ்தானின் கராச்சி நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளான். மார்ச் 1 ஆம் தேதி நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜஹூர் இப்ராஹிம் சுட்டுக்கொல்லப்படும் சிசிடிவி காட்சியில் முகக்கவசம் ஹெல்மெட் அணிந்துகொண்டு பைக்கில் வரும் இருவர் சுட்டுக் கொல்வது இடம்பெற்றுள்ளது. இதனால் கொலையாளிகள் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு 4 குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ஜஹூர் இப்ராஹிமின் இறுதிச் சடங்கில் ஜெய்ஷ் இ முஹம்மது தலைவர் மசூத் அசார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 30 போர் கைத்துப்பாக்கியை கொண்டு ஜஹூர் இப்ராஹிம் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி 5 பயங்கரவாதிகளால் 179 பயணிகளுடன் 11 விமான பணியாளர்களுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நேபாளில் இருந்து ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகருக்கு கடத்திச் செல்லப்பட்டது. விமான கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார், சையது உமர் ஷேக் மற்றும் முஸ்தாக் அஹ்மது சர்கார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த விமான கடத்தலின்போது ருபின் கத்யால் என்பவர் ஜஹூர் இப்ராஹிமால் பல முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். ருபின் கத்யாலுக்கு நீதிகோரி பல்வேறு முயற்சிகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளான் ஜஹூர் இப்ராஹிம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications