வேலைக்கு Europe போறீங்களா.. ஏமார்ந்துடாதீங்க! இந்தியர் கொடுத்த முக்கிய எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

ஹெல்சின்கி: யூரோப் நாடுகளில் வேலை என்றால்.. நம்மாட்கள் முதல் வரிசையில் வந்து நிற்பார்கள். ஆனால், உண்மையில் அங்கு வேலை எப்படி இருக்கும்? சம்பளம் போதுமானதாக இருக்குமா? என்பது நமக்கு தெரியாது. இந்நிலையில் பின்லாந்தில் வேலை பார்த்து வரும் இந்தியர் ஒருவர், அங்குள்ள நிலைமையை விளக்கி வீடியோ போட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் பின்லாந்தில் வாங்கும் சம்பளமும், இந்தியாவில் ஒருவர் வாங்கும் சம்பளமும் எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை விளக்கியிருக்கியிருக்கிறார்.

Indian in Finland

"1 யூரோ என்பது இன்றைய தேதியில் ரூ.110க்கு சமம். அப்படியெனில் ஐரோப்பிய நாடுகளில் 1,500 யூரோக்கள் சம்பளம் வாங்குபவர்கள் மாதம் ரூ.1.5 லட்சம் சம்பாதிக்கிறார்கள் என்று தவறாக கணக்கு போடுகிறார்கள். ஐரோப்பாவை பொறுத்தவரை 100 யூரோவை வைத்து அதாவது.. ரூ.11,000-ஐ வைத்து வெறும் 1-2 நாட்கள் மட்டும்தான் சமாளிக்க முடியும். இந்தியாவில் இந்த காசை வைத்து 2 வாரங்களுக்கு சமாளித்துவிடலாம். எனவே வெளிநாட்டு கவர்ச்சியான சம்பளத்தை கேட்டு ஏமார்ந்துவிட வேண்டாம்.

இங்கு சம்பளம் அதிகமாக இருந்தாலும், அற்கேற்றார் போல வீட்டு வாடகை, வரி, அன்றாட வாழ்க்கை செலவுகள் மிக அதிகம். எனவே, இங்கு கொடுக்கும் சம்பளத்தை அப்படியே இந்திய கரன்சியில் மாற்றி கணக்குப்போட்டு ஏமார்ந்துவிட வேண்டாம்" என்று கூறியிருக்கிறார்.

அவர் சொல்வது உண்மைதான். நம்மூரில் மாதம் 40,000 சம்பளத்தில் பல்லை கடித்துக்கொண்டு குடும்பத்தை நடத்திவிடலாம். ஆனால், ஐரோப்பாவில் மாதம் ரூ.2-3 லட்சம் சம்பாதிக்க வேண்டும். இல்லையெனில் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே பணம் பத்தாது. இந்த வீடியோ பார்த்த பலரும்.. இந்தியர் சொல்வது உண்மைதான் என்று கூறியிருக்கின்றனர்.

எனவே வெளிநாடுகளுக்கு.. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்கு செல்வதாக இருந்தால்.. அங்கு கொடுப்பதாக சொல்லப்படும் சம்பளத்தை இந்திய ரூபாயில் கணக்கு போட்டு பார்க்காமல்.. அங்கு வாழ்வாதாரத்திற்கு குறைந்தப்பட்சம் எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்துக்கொண்டு போவது
சிறந்தது.

எல்லா ஊருலயும் குறைவான சம்பளத்திற்குதான் ஆள் தேடுவார்கள். எல்லா நாட்டு முதலாளிகளும் ஒரே மாதிரிதான். உழைப்பு சுரண்டல்தான் அவர்களின் நோக்கம். குறைவான கூலி என்பதால் உள்ளூர் ஆட்களே அங்கு வேலை செய்ய தயங்குவார்கள். அதனால்தான் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஆட்களை கேட்கிறார்கள். எனவே இந்த விஷயத்தை எல்லாம் புரிந்துக்கொண்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு போக வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+