For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளி முகமது உசேனி மலேசியாவில் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் ஜாகீர் உசேனின் கூட்டாளி முகமது உசேனி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த கியூ பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 29-ஆம் தேதி இலங்கை கண்டியைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி முகம்மது ஜாகீர் உசேனை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

Indian Mujahideen terrorist’s aide held in Malaysia

அவரிடமிருந்து கள்ளநோட்டுகள், சேட்டிலைட் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அமெரிக்க துணைத் தூதரகம், இஸ்ரேல் துணைத் தூதரகம், கொச்சி, விசாகப்பட்டினம் கடற்படைத் தளங்கள் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அந்த புகைப்படங்களை சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அமீர் ஜூபைர் சித்திக், பாஸ் என்கிற ஷா ஆகியோரிடம் வழங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், ஷா மீது வழக்குப் பதியப்பட்டது.

மேலும் சிலர் ஊடுருவல்

இதற்கிடையே உசேன் தனது வாக்குமூலத்தில், மேலும் இருவருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததாகவும், அவர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்து இருந்தார்.

கள்ளநோட்டுக்கும்பல் கைது

உசேன் கொடுத்த தகவலின் அடிப்படையில், கள்ளநோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் வேலை செய்ததாக மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் சிவபாலன், மண்ணடியைச் சேர்ந்த முகம்மது சலீம் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.2.50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த விசாரணைக்குப் பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உசேனை மே.27 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மலேசியாவில் கைது

இந்நிலையில் ஜாகீர் உசேனுடன் தொடர்புடையவர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் மலேசியாவில் ஜாகீர் உசேனின் கூட்டாளி முகமது உசேனி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த கியூ பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர். முகமது உசேனியின் பாஸ்போர்ட் ஆவணங்களை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். மேலும் பிடியாணை வழங்க கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

English summary
A Sri Lankan national, believed to be an associate of suspected ISI agent Sakir Hussian who was arrested in Chennai, was nabbed in Kuala Lumpur, Malaysia. Malaysian police claimed that by arresting him it too had unearthed a plot to attack foreign missions in Chennai and Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X