ஜேம்ஸ் பாண்ட்.. ஆல்பம் சாங்.. அட்வஞ்சர் புக்.. வானத்தில் சுற்றும் டெஸ்லா காரில் உள்ள அதிசயங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஒவ்வொரு நாடும் கஷ்டப்பட்டு வானத்திற்குச் செயற்கை கோளை அனுப்பிக் கொண்டு இருக்கும் போது எலோன் மஸ்க் மட்டும் தன்னுடைய காரை அனுப்பி இருக்கிறார். உலகமே அவரைப்பற்றித்தான் பேசிக் கொண்டு இருக்கிறது.

இந்த கார் உலகின் பெரிய ராக்கெடான ''ஃபல்கான் ஹெவி'' மூலம் ஏவப்பட்டு இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இந்தச் சாதனையை செய்து இருக்கிறார்.

தற்போது இந்த காரில் இருக்கும் சில முக்கியமான விஷயங்கள் வெளியே வந்துள்ளது. இதில் ஒரு பாடலும், புத்தகங்கள் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருவது போலவே இதில் கார் ஏவப்பட்டு உள்ளது.

டோன்ட் பேனிக் வரி

டோன்ட் பேனிக் வரி

இந்த காரின் டேஷ்போர்டில் 'டோன்ட் பேனிக்' என்ற வாசகம் இடம்பெற்று இருக்கும். இது ''தி ஹிட்சிக்கர் கைட் டு கேலக்சி'' என்ற புத்தகத்தில் இடம்பெற்ற வாசகம் ஆகும். இது ஸ்பேஸ் டிராவல் குறித்த புத்தகம். இந்தப் புத்தகம் எலோன் மஸ்க் மிகவும் விரும்பிப் படித்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன பாடல்

இந்த காரில் ஒரு பாடல் மட்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. டேவிட் போவி என்பவரின் புகழ்பெற்ற 'லைஃப் ஆன் மார்ஸ்' என்ற பாடல் ஆகும். இந்தப் பாடலும் அவர்க்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் இதில் இடம்பெற்றுள்ளது.

முழு பாடல்

இந்தப் பாடல் மொத்தம் 4 நிமிடம் ஓடும். இந்த காரில் இருந்த பேட்டரி மொத்தம் 4 மணி நேரம் செயல்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பாடலும் மொத்தம் 4 மணிநேரம் வானத்தில் தொடர்ந்து ஓடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

பலரின் பெயர்கள்

அதுபோல் இந்த காரில் இருக்கும் பொம்மைக்கு ஸ்டார் மேன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் டேவிட் போவி மூலம் அவருக்கு அறிமுகம் ஆன பெயர் ஆகும். அதேபோல் இந்த காரின் அடிப்பக்கம், அந்த ராக்கெட் ஏவ வேலை பார்த்த அனைவரின் பெயரும் இடம்பெற்று உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Space X successfully launched Falcon Heavy rocket. It is known as the worlds's largest and most power full rocket. It has created by Space X Company which is a private space research company run by Elon Musk. Nasa watches Space X's Tesla car in space.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற