தெஹ்ரான்: ஈரானுக்கு எதிராக 6வது நாளாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளில் உள்ள சிபிஎஸ்இபள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது.
ஈரான் மீதான தாக்குதல் 6வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு சென்ற, மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, ஈரான் தூதரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
Mar 06, 2026, 7:14 am IST
இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்
இஸ்ரேலின் டெல் அவிவ் மத்திய பகுதியில் ஒரே நேரத்தில் பல்வேறு ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குவைத்தில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான அலி அல் சலாம் ராணுவ விமானப் படை தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக அந்த பகுதியே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
Mar 05, 2026, 7:48 pm IST
லெபனானில் ஹிஸ்புல்லா ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வீரர்கள் வெளியேற அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Mar 05, 2026, 7:38 pm IST
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்திருப்பதால், அந்நாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது.
Mar 05, 2026, 7:07 pm IST
ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் வேண்டும் என்றே மக்கள் வசிக்கும் இடங்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதாக ஈரான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
Mar 05, 2026, 6:54 pm IST
ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களில் இதுவரை 1,230 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் உச்ச தலைவர் கமேனி உள்பட முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
Mar 05, 2026, 6:47 pm IST
மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் போர் குறித்து பிரான்ஸ் அதிபருடன், நரேந்திர மோடி பேசியிருக்கிறார்
Mar 05, 2026, 1:54 pm IST
இந்தியப் பெருங்கடலில், ஈரானின் 'டேனா' போர்க்கப்பலை அமெரிக்கக் கடற்படை மூழ்கடித்தது. இதை 'கடலில் நடந்த ஒரு கொடூரம்' என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கண்டித்தார். மேலும், அமெரிக்காவுக்கு மிக மோசமான பதிலடியை கொடுப்போம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Mar 05, 2026, 12:30 pm IST
ஜோர்டான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு இஸ்ரேலில் ட்ரோன் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் இருந்து ஏவப்பட்ட 100+ ட்ரோன்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஏற்கனவே சுட்டு வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Mar 05, 2026, 11:34 am IST
ஹார்முஸ் ஜலசந்தியில் ஞாயிற்றுக்கிழமை ஈரான் ஏவுகணையால் தாக்கப்பட்ட ஸ்கைலைட் எண்ணெய் கப்பலைச் சேர்ந்த இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Mar 05, 2026, 6:50 am IST
ஈரான் போர் விவகாரம்- டிரம்ப் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் மசோதா தோல்வி
60 நாட்களுக்கு மேல் போரை தொடர நாடாளுமன்ற அனுமதியை கோரும் மசோதா தோல்வி
47-53 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா தோல்வி
இதனால் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் டிரம்ப்பால் போரை தொடர முடியும்
Mar 04, 2026, 7:23 pm IST
வளைகுடா போர் காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.92.16 என சரிந்திருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவான சரிவாகும்.
Mar 04, 2026, 5:58 pm IST
ஈரானின் 129 ட்ரோன் தாக்குதல்களில் 121 தாக்குதல்கள் அழிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர், இந்தியர்கள் உள்பட 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Mar 04, 2026, 5:42 pm IST
துருக்கியை நோக்கி ஈரான் ஏவுகணை ஏவி தாக்கிய நிலையில், நேட்டோ வான் பாதுகாப்பு அமைப்பு அதை அழித்துள்ளது. துருக்கி வான்பரப்புக்குள் நுழைந்த ஏவுகணையை அழித்ததாக இஸ்தான்புல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள ‘சேப்ட்’ நகரில் அமைந்து இருக்கும் ராணுவ தளத்தை தாக்கி உள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பு ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் மல்லுக்கட்டி வருகிறது.
Mar 04, 2026, 3:04 pm IST
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் போரை தொடங்கி உள்ளது. இந்த போர் இந்தியாவை நெருங்கி உள்ளது. இந்திய பெருங்கடலில் வலம் வந்த அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இந்திய பெருங்கடலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Mar 04, 2026, 1:58 pm IST
ஈரானின் போர்க்கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி கடலில் மூழ்கடித்து வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா – இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் மூழ்கி கொண்டிருந்த ஈரானின் போர்க்கப்பலில் இருந்து 30 மாலுமிகளை இலங்கை கடற்படை காப்பாற்றி உள்ளது. பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
Mar 04, 2026, 11:28 am IST
ஈரான் போர் காரணமாக மத்தியதரைக் கடலுக்கு பிரான்ஸ் விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பி உள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக பிரான்ஸ் தனது முதன்மை விமானம் தாங்கிக் கப்பலை மத்தியதரைக் கடலுக்கு அனுப்பி உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
Mar 04, 2026, 11:11 am IST
ஈரான் போர் காரணமாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் மேற்கு ஆசியா மற்றும் அரபு நாடுகளில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கி உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைகளை இந்தியர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
A Special Control Room has been set up in the Ministry of External Affairs in view of the current situation in West Asia and the Gulf region. Details are as below ⬇️
ஈரான் போர் காரணமாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் மேற்கு ஆசியா மற்றும் அரபு நாடுகளில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கி உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைகளை இந்தியர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
A Special Control Room has been set up in the Ministry of External Affairs in view of the current situation in West Asia and the Gulf region. Details are as below ⬇️
லெபனானின் ஹஸ்மியேயில் உள்ள ஒரு ஹோட்டலில் இஸ்ரேலிய படைகள் குண்டுவீச்சு நடத்தியுள்ளன. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.
Mar 04, 2026, 9:20 am IST
ஈரானுக்கு ஆதரவளிக்கும் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் 6 பேர் பலி – 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்– லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு
Mar 04, 2026, 9:06 am IST
ஆதாரம் இல்லை - ரஷ்யா
அணு ஆயுதத்தை காரணமாக வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன என்றும், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
Mar 04, 2026, 8:51 am IST
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா அறிவித்துள்ளது.
Mar 04, 2026, 8:14 am IST
துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்
துபாயில் அமெரிக்க தூதரகத்திற்கு தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது
Mar 04, 2026, 6:50 am IST
ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராக மௌஜ்தபா கமேனி தேர்வு
மறைந்த அலி கமேனியின் 2வது மகன் தான் மௌஜ்தபா கமேனி
56 வயதான மௌஜ்தபா கமேனி தான் இனி ஈரானை வழிநடத்துவார்
Mar 04, 2026, 6:45 am IST
ஆபரேஷன் எபிக் ப்யூரி' போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து சுமார் 2,000 ஈரான் இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. இதில் 17 ஈரான் கடற்படை கப்பல்களும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் அடங்கும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
Mar 03, 2026, 6:05 pm IST
ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இடதுசாரிகள், விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது திருமாவளவன் பேசுகையில், ‘கமேனி கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.. அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்துவதாக” கூறினார்.
Mar 03, 2026, 5:58 pm IST
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் திறன்களை தாக்க கூடும் எனவும் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த முடிவினை எடுக்கலாம் என்று கூறிய நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. இத்தகைய எந்த ஒரு செயலும் ஈரானுக்கு எதிரான போராகவே கருதப்படும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
Mar 03, 2026, 5:32 pm IST
கடந்த 28 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இரு தரப்பிலும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கிறது. இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களால் ஈரானில் உயிரிழப்பு எண்ணிக்கை 787 ஆக அதிகரித்துள்ளது.
READ MORE
1:58 PM, 28 Feb
ஈரான் மீது இன்று திடீரென்று இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது.
1:58 PM, 28 Feb
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம், ஹாசன் அபாத் சதுக்கம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக டெஹ்ரானில் உள்ள ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகம், ஈரான் உளவுத்துறை அலுவலகம், பாதுகாப்பு துறை அமைச்சகம், அணுசக்தி திட்டங்களின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2:00 PM, 28 Feb
ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதலை தொடங்கி உள்ளது. ஆனால் உண்மையில் அயதுல்லா அலி கமேனி தற்போது டெஹ்ரானில் இல்லை. அவர் ஈரானில் பாதுகாப்பான சுரங்கத்தில் ரகசியமாக பதுங்கி உள்ளாராம். இதனை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
2:04 PM, 28 Feb
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்கா இணைந்துள்ளது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரானை தாக்க தொடங்கி உள்ளது.
2:20 PM, 28 Feb
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியை தொடங்கி உள்ளது ஈரான். ஈரான் சார்பில் முதற்கட்டமாக 30 ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவை நோக்கி சீறிப்பாய்கிறது.
2:26 PM, 28 Feb
‘‘வருங்கால நலன் கருதி ஈரான் மீது போர் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களை ஈரான் கொன்று குவித்து இருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு கட்டமைப்புக்கு சவால் விடும் வகையில் ஈரான் செயல்படுவதால் தான் இந்த போர் தொடங்கப்பட்டுள்ளது.
2:34 PM, 28 Feb
‘‘இந்த போரில் விலை மதிப்பற்ற அமெரிக்க வீரர்கள் பலியாகலாம் என்பது எனக்கு தெரியும். போர் என்றால் அது தவிர்க்க முடியாதது. வருங்கால நலனுக்காகவே இந்த போர்’’ என அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் கருத்து.
2:40 PM, 28 Feb
இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 30 ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரை நோக்கி சீறிப்பாய்ந்துள்ளது. இந்த வேளையில் ஈரானின் ஆதரவு அமைப்பான ஹவுதிகளும் இஸ்ரேலை தாக்க தொடங்கி உள்ளன. ஹவுதிகள் ஏமனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த ஹவுதிகளின் ஈரானின் சப்போர்ட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் ஹவுதிகளும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளன. இதனால் பெரிய போர் ஏற்பட்டுள்ளது.
3:12 PM, 28 Feb
தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவின் கடற்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தலைமையகத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
3:53 PM, 28 Feb
கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தையும் ஈரான் குறிவைத்துள்ளது. கத்தாரில் அமெரிக்காவுக்கு சொந்தமான அல் உதித் விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை அனுப்பியது. இருப்பினும் அங்குள்ள வான்வெளி பாதுகாப்பு அமைப்பு ஈரானின் ஏவுகணையை இடைமறித்து அழித்துள்ளது. இதனை கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
3:53 PM, 28 Feb
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் அமெரிக்காவுக்கு சொந்தமான அல் தாப்ரா விமான தளம் அமைந்துள்ளது. இந்த விமான தளத்தை நோக்கியும் ஈரான் தாக்குதலை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக அபுதாபியில் சில இடங்களில் தாக்குதல் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது.
4:51 PM, 28 Feb
இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. யுஏஇ, சவுதி, கத்தார், ஓமன் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக் ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று துருக்கி ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ் விமான சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
5:10 PM, 28 Feb
ஈரான் மீது இன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தியது. இதில் தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி மீதும் இஸ்ரேல் தாக்கியது. இதில் 24 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இதனை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
5:32 PM, 28 Feb
இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் வான் பரப்பை மூடியுள்ளதால், சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7:09 PM, 28 Feb
அமெரிக்க படைத் தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது மேலும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. குவைத், ஜோர்டான் நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.
7:15 PM, 28 Feb
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ விமான நிறுவமனம் தெரிவித்துள்ளது.
8:45 PM, 28 Feb
உலகின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக அறியப்படும் துபாய் விமான நிலையம் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா- இஸ்ரேலுக்கு பதிலடியாக துபாயில் உள்ள அமெரிக்க சொத்துக்களை ஈரான் குறிவைப்பதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
9:31 PM, 28 Feb
ஈரான், வளைகுடா நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பும் நிதானத்தை கடைப்பிடிப்பதோடு மோதலை தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்புக்கு அனைத்து தரப்பும் முன்னுரிமை அளிக்க வேண்டும். போர் பதற்றங்களை தணிக்க அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
9:35 PM, 28 Feb
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ விமான நிறுவமனம் தெரிவித்துள்ளது.
9:40 PM, 28 Feb
இஸ்ரேல் ஈரான் போரால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவித்துள்ளது.
9:58 PM, 28 Feb
ஈரான் மீது இஸ்ரேல் இன்று ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் தெற்கு ஈரானில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ஏவுகணை வெடித்து சிதறியது. இதில் பலியான சிறுமிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
10:44 PM, 28 Feb
ஹர்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு. அரபு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை கொண்டு வரும் கப்பல்கள் இந்த ஜலசந்தியை கடந்துதான் வர வேண்டும். ஹர்மூஸ் ஜலசந்தியை மூடுவதால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு.
12:02 AM, 1 Mar
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டிருப்பதால், அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
12:03 AM, 1 Mar
வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
12:28 AM, 1 Mar
ஈரானின் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாகக் கூட்ட சீனாவும் ரஷ்யாவும் அழைப்பு விடுத்துள்ளன.
12:58 AM, 1 Mar
ஈரான் சுப்ரீம் லீடர், காமெனி தங்கியிருக்கும் இடத்தை சுற்றி 30 ஏவுகணைகள் வீசப்பட்டன என்றும், இந்த தாக்குதலில் காமெனி இறந்துவிட்டார் என்றும் இஸ்ரேலின் சேனல் 12 தெரிவித்திருக்கிறது.
6:48 AM, 1 Mar
எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து தப்ப முடியவில்லை- டிரம்ப்
6:48 AM, 1 Mar
ஈரான் மக்களுக்கும், பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கும் நீதி கிடைத்துவிட்டது- டிரம்ப்
6:48 AM, 1 Mar
வரலாற்றில் மிகக் கொடூரமானவர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார்- டிரம்ப்
6:48 AM, 1 Mar
ஈரானின் உச்ச தலைவர் கமேனி உயிரிழந்துவிட்டார்- அமெரிக்க அதிபர் டிரம்ப்
Israel Launch Attacks on Iran (ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ) LIVE News in Tamil: US and Israel launch major combat operations against Iran as Trump makes a key announcement. Tehran under attack amid rising Middle East tensions. Get live updates in Tamil on war, airstrikes and global impact.