தவறு நடக்க போகிறது.. அணு உலைக்கு குறி வைக்கிறாங்க.. பதறி ஓடிய ஈரான்.. இஸ்ரேல் மீது பரபர புகார்
டெஹ்ரான்: சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் புகார் வைத்துள்ளது. தங்களின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்க வாய்ப்பு உள்ளதாக ஈரான் புகார் அளித்துள்ளது. அணுசக்தி தளங்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயல்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது. இதை அனுமதிக்க கூடாது என்று ஈரான் புகார் வைத்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக்குழுவுக்கு முறையான கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில்.. இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபரும், அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார்.
ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
மோசமான சூழல்: சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்துவதற்கான நாளை இஸ்ரேல் குறித்துவிட்டதாக அமெரிக்கா கூறி வருகிறது. நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இஸ்ரேல் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க உளவு அதிகாரிகள் அந்நாட்டு அரசிடம் தெரிவித்து உள்ளார்களாம்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடக்கும். இஸ்ரேல் கண்டிப்பாக பதிலடி கொடுக்கும். ஈரானில் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களை தாக்குவதை விட ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார். முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில் மிகப்பெரிய பதிலடியை கொடுக்காமல்.. மிதமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று பிடன் நெதன்யாகுவிடம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் பிடனின் இந்த கோரிக்கையை நெதன்யாகு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார்.
பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் இந்த நிழல் யுத்தம் ஒரு நேருக்கு நேர் இராணுவ மோதலாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நேரம் உள்ள நிலையில்.. இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடிக்க போவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications