ஆபரேஷன் 'பரக்கத் அல்-ஃபத்தாஹ்'! மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
தெஹ்ரான்: தங்கள் நாட்டின் அணு ஆய்வு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியதையடுத்து, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதலை தொடங்கியது ஈரான்.
முதல் கட்டமாக 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியிருக்கிறது. மேற்காசியாவின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளம், கத்தாரில்தான் உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் மீது 10 ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது. இதில் 7 இடைமறிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 3 ஏவுகணைகள் சரியாக இலக்கை தாக்கியுள்ளன. ஈரான் இந்த தாக்குதலுக்கு, ஆபரேஷன் பராக்கத் அல்-ஃபத்தாஹ் என பெயரிட்டிருக்கிறது. இதில் பராக்கத் என்றால் ஆசிர்வாதம் என்று பொருள். அல்-ஃபத்தாஹ் என்றால் வெற்றி பெறுபவர் என்று அர்த்தம். இது இஸ்லாத்தில் அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் ஒன்றாகும். மொத்தமாக சேர்த்து படித்தால் 'வெற்றியின் ஆசீர்வாதம்' என்று பொருள் வருகிறது.
ஈரான் தாங்கள் தாக்குதல் நடத்தும் அமெரிக்க ராணுவத்தளம் குறித்தான 3D காணொளியை வெளியிட்டுள்ளன. இந்த வீடியோவில், "இந்த மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் பல அயோக்கியத்தனமான தாக்குதல்கள் இங்கிருந்துதான் துவங்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளன.
கத்தாரில் ஈரான் ஏவுகணைகள் தாக்கியிருப்பதை உள்ளூர் ஊடகங்கள் உறுதி செய்திருக்கின்றன. மட்டுமல்லாது கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கப்போகிறோம் என்று ஈரான் முன்கூட்டியே தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான் சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னரே கத்தார் தனது வான் எல்லையை மூடியுள்ளது. அதேபோல அமெரிக்க ராணுவ தளங்கள்தான் எங்கள் இலக்கு என்றும் ஈரான் தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதலடி கொடுக்க சவுதியின் அமெரிக்க ராணுவ தளத்திலிருந்து போர் விமானங்கள் ஈரான் நோக்கி பறந்துள்ளன.
ஏன் கத்தார் தளத்தின் மீது தாக்குதல்?
கத்தாரில் உள்ள அல் உதேய்த் விமானப்படைத் தளத்திலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு சுமார் 1,145 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ஜெட் விமானங்கள் மூலம் இந்த தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகும். மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திலேயே இதுதான் மிகப்பெரியது. ஏராளமான போர் விமானங்கள், ட்ரோன்கள் இங்கு உள்ளன. மத்திய கிழக்கு பகுதிக்கான அமெரிக்க ராணுவத்தின் தலைமையிடமே இதுதான். எனவேதான் ஈரான் இதை குறி வைத்திருக்கிறது.
-
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்!












Click it and Unblock the Notifications