For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீறுவோம் என ஈரான் அறிவிப்பு.. பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Trump warns Iran | ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

    டெஹ்ரான்: 2015-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    ஈரான் நாட்டு புரட்சி படையின் தலைவர் சுலைமானியை அமெரிக்க படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவை பழிக்கு பழி வாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கர் மீதோ அல்லது எங்கள் சொத்துகள் மீதோ கையை வைத்தால் நடப்பதே வேறு என்றும் ஈரானில் உள்ள 52 இடங்களில் குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    அணுசக்தி ஒப்பந்தம்

    அணுசக்தி ஒப்பந்தம்

    இந்த நிலையில் 2015-இல் அணுசக்தி ஒப்பந்தத்தை மீற போவதாக ஈரான் அறிவித்துள்ளது. அத்துடன் ஈரானில் உள்ள அமெரிக்க படைகளை வெளியேற்ற உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

    நடவடிக்கைகள்

    நடவடிக்கைகள்

    இதுகுறித்து ஈரான் நாட்டு அரசு தொலைகாட்சி சேனல் வெளியிட்ட அறிக்கையில் எரிபொருள் செறிவூட்டல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பின் அளவு, அதன் ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகள் மீதான ஒப்பந்தத்தை ஈரான் மீறுகிறது.

    தீர்மானம்

    தீர்மானம்

    அணுசக்தி இயக்க நடவடிக்கைகளில் ஈரானுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. அதே வேளை அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அமெரிக்க படைகள் உள்பட மொத்தம் 5,200 வெளிநாட்டு படைகளை வெளியேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    தெளிவுப்படுத்த

    தெளிவுப்படுத்த

    இந்த இரு அறிவிப்புகளால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மேலும் தீவிரமடையும் என தெரிகிறது. இந்த அறிவிப்புகள் குறித்து அமெரிக்கா உடனடியாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மார்கன் ஆர்டாகஸ் கூறுகையில் தாங்கள் எடுத்த சட்ட ரீதியிலான நடவடிக்கை குறித்து தெளிவுப்படுத்த அமெரிக்கா காத்திருக்கிறது.

    கையெழுத்து

    கையெழுத்து

    ஆனால் தற்போது ஈரான் எடுத்த முடிவுகளால் அதிருப்தி அடைந்துள்ளது. எடுத்த முடிவுகளை ஈராக் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என்றார். 2015-ஆம் ஆண்டு ஈரான், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் (ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன்) ஆகிய நாடுகள் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

    அணு ஆயுதம் தயாரிப்பு

    அணு ஆயுதம் தயாரிப்பு

    அதன்படி ஈரான் புளூடானியம் மற்றும் யுரேனியம் ஆகிய இரு அணுசக்தி பொருட்களைப் பயன்படுத்த அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஏற்கெனவே வெளியேறிவிட்டது. ஈரான் நாட்டின் இந்த நடவடிக்கையால் அடுத்தது அனுமதியின்றி அணு ஆயுதம் தயாரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    English summary
    Iran announces that it will not abide nulear limits which has in 2015 Nuclear deal. It will escalate further tension.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X