"கோமா.. படுகாயம்.." உயிருக்கு போராடும் ஈரானின் புதிய சுப்ரீம் லீடர்.. அமெரிக்க உளவு துறைக்கு போன ரிப்போர்ட்
தெஹ்ரான்: வளைகுடா போர் ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கிடையே ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் தொடர்பான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. மேலும், அவர் கோமாவில் இருப்பதாகவும் ஈரானை ஆட்சி செய்யும் நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போரை ஆரம்பித்துள்ளது. இந்த மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. ஈரானில் அலி கமேனி உயிரிழந்த பிறகு அவரது மகன் மொஜ்தபா கமேனி சுப்ரீம் லீடராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், ஒரு மாதமாக அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.

மொஜ்தாபா
இதற்கிடையே ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உடல்நிலை குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மொஜ்தபா கமேனி சுயநினைவின்றி இருப்பதாகவும் அவர் கோம் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இஸ்ரேல் உளவுத்துறையில் வேலை செய்வோர் தான் இந்த தகவல்களைக் கூறியதாகவுமே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
படுகாயம்
அதாவது போர் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28ம் தேதி இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் அப்போதைய சுப்ரீம் லீடரான அலி கமேனி கொல்லப்பட்டார். அலி கமேனி முக்கிய அமைச்சர்கள், தலைவர்கள் உடன் மீட்டிங் ஒன்றை நடத்திய நிலையில், அந்த கூட்டத்தில் தான் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கமேனி உயிரிழந்த நிலையில், மொஜ்தபாவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் நாட்டை நிர்வகிக்க இயலாமல் கோமில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
கண்ட்ரோலில் இல்லை
இது தொடர்பாக உளவுத் துறை வட்டாரங்கள் மேலும் கூறுகையில், "மொஜ்தபா கமேனி கோமில் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. அரசு சார்ந்து எந்தவொரு முடிவுகளையும் அவர் எடுப்பதில்லை. முடிவுகளை எடுக்கும் நிலையிலும் அவர் இல்லை" என தி டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அவர் சுப்ரீம் லீடராக பதவியேற்ற பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்பது தொடர்பாகத் தெளிவான தகவல்கள் இல்லாத சூழலில், இப்போது அவரது இருப்பிடம் குறித்து முதல்முறையாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குத் தெற்கே 87 மைல் தொலைவில் உள்ள கோம் என்ற நகரில் இருக்கிறாராம். ஷியா இஸ்லாம் கொள்கைகளின்படி இது புனித நகரமாகக் கருதப்படுகிறது.. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகளுக்கு அவரது இருப்பிடம் தெரியும் என்றும் இருப்பினும் அவர்கள் பகிரங்கமாக அதை அறிவிக்கவில்லை என்றும் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
பொதுவெளிக்கு வரவில்லை
மொஜ்தபா கமேனி புதிய சுப்ரீம் லீடராக பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இருப்பினும், அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 56 வயதான மதகுரு மொஜ்தபாவின் தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் படுகாயமடைந்த மொஜ்தபா கோமாவில் இருக்கிறார் என்றும் அரசை நடத்தவில்லை என்பதுமே உளவு துறை தகவலாக உள்ளது.
இருப்பினும், ஈரான் வேறு விதமாகவே சொல்கிறது. மொஜ்கபா காயமடைந்துள்ளது உண்மை தான் என்றாலும் அவரே எல்லா பொறுப்புகளையும் கவனித்து வருவதாக ஈரான் சொல்கிறது. சமீபத்தில் தான் கமேனியின் இரண்டு அறிக்கைகள் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டன. மேலும், அவர் வார் ரூமிலும் ஆய்வு செய்ததாகக் கூறப்பட்டது.
-
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
அவ்வளவு தான்..சோலி முடிஞ்சு! தள்ளாடுதே தங்கம்! காசை போட்டவர்கள் பெரும் கவலை! எதனால் இப்படி நடக்குது? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications