மூளை இருக்க வேண்டிய இடத்தில் வெற்றிடம்தான் இருந்தது.. மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளித்த முதியவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மூளைக்கு பதில் தலையில் வெற்றிடம் இருந்த மனிதர்- வீடியோ

  டூப்லின்: அயர்லாந்தை சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவருக்கு, மூளை இருக்க வேண்டிய இடத்தில், வெறும் வெற்றிடம் இருந்ததாக அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

  முழு மூளையும் இல்லாமல் இடப்பக்க மூளையில் பெரும்பாலான பகுதி இல்லை என்று மருத்துவர்கள் கண்டுபித்துள்ளார்கள். இது எப்படி நடந்து என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

  இவர் எப்படி இவ்வளவு நாள் உயிரோடு இருக்கிறார் என்று மருத்துவர்களுக்கு தெரியவில்லை. வேறு ஒரு சோதனைக்கு வந்தவருக்கு இந்த பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

  நலமில்லை

  நலமில்லை

  இந்த முதியவருக்கு கடந்த சில மாதங்களாக தலைவலி ஏற்பட்டு இருக்கிறது. உடல்சோர்வு, பசியின்மை, மறந்து போதல், மயக்கம் என நிறைய பிரச்சனைகள் வந்து இருக்கிறது. சில சமயமாக மோசமான காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது.

  தெரியவில்லை

  தெரியவில்லை

  இதனால் அந்த முதியவர் காஸ்வே மருத்துவமனை என்ற பிரபல மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு இவருக்கு எல்லாவிதமான சோதனையும் செய்து இவருக்கு என்ன பிரச்சனை, ஏன் இப்படி உடல் நலமில்லாமல் போனது என்று தெரியவில்லை. இதனால் இவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க சொல்லி இருக்கிறார்கள்.

  கண்டுபிடிப்பு

  கண்டுபிடிப்பு

  எம்.ஆர்.ஐ ஸ்கேன் முடிவில்தான் இவருக்கு மூளையில் பாதி பகுதியே இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இடது மூளையின் மேல் பகுதியில் ஒரு பக்கம் அப்படியே காணாமல் போய் இருக்கிறது. இதனால் அவரை வைத்து பல மருத்துவர்கள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

  என்ன காரணம்

  என்ன காரணம்

  இவருக்கு இந்த பிரச்சனை இருப்பதே கடந்த பிப்ரவரி மாத இறுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இவரை வைத்து நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் வந்துவிட்டது. ஆனாலும் அவருக்கு இந்த குறைபாடு எப்படி வந்தது என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Ireland 84-year-old man got no half of brain in his head. Doctors checking his health condition and released some of the research articles on this unique issue.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற