For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெச் 1 பி விசா தற்காலிக நிறுத்தமா ? அமெரிக்க குடியுரிமை அலுவலகம் சொல்வது என்ன?

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் ஹெச் 1 பி விசாவுக்கான விண்ணப்பங்களை
தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான இந்திய ஊடகங்கள் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன.

USCIS என்று சுருக்கமாக அழைக்கபப்டும் அமெரிக்க குடியுரிமை சேவைக்கான அலுவலகம் வெளியுட்ட அறிவிப்பில் ஹெச் 1 விசாவுக்கான விரைவு விண்ணப்பங்கள் மட்டுமே தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Is US really stopped H1B Visa Process?

ஆண்டுக்கு 85 ஆயிரம் ஹெச் 1 பி விசாக்கள்

ஹெச் 1 விசாவுக்கு ஆண்டு தோறும் 65 ஆயிரம் பொது விண்ணப்பங்களும் கூடுதலாக 20 ஆயிரம் விசாக்கள் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்தவர்களுக்கும் அனுமதிக்கப்படுகிறது.

அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையிலுமான இந்த 85 ஆயிரம் விசாக்களுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்ப்படும்.

கடந்த பல வருடங்களாக ஏப்ரல் முதல் வாரத்திற்குள்ளாகவே இரண்டு மடங்கு அல்லது மும்மடங்கு எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் முதல் சில தினங்களுக்குள்ளாகவே வந்து விடுகின்றன.

ஆகையால் அந்த ஆண்டுக்கான ஹெச்1 விசா விண்ணப்பங்களை மேற்கொண்டு ஏற்பதில்லை. புதிதாக ஹெச் 1 விசா விண்ணப்பிக்கும் போது மூன்றாண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட அனுமதி தேதிக்கு முன்னதாக புதிப்பித்துக்கொள்ள மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த மறு அனுமதி விண்ணப்பம் அந்த ஆண்டு கோட்டாவுக்குள் வராது.

அதாவது, ஏற்கனவே ஹெச் 1 விசாவில் இருப்பவர்கள் விசா முடிவு காலத்திற்குள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 6 ஆண்டுகள் வரைக்கும் அனுமதிக்கப்படுவார்கள்.

ஹெச் 1 விசா 5ம் ஆண்டு இருக்கும் போதே, க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால், 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெச் 1 விசா நீட்டிப்பு தரப்படும்.

அது என்ன விரைவு விண்ணப்பம்?

க்ரீன் கார்டு விண்ணப்பத்தின் இரண்டாம் நிலை( I 140) கடந்து விட்டால் ஹெச் 1 விசா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிப்பு செய்ய வேண்டும். முதல் நிலையிலேயே இருந்தால் ஆண்டு தோறும் ஹெச் 1 விசா நீட்டிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சில நேரங்களில் மூன்றாண்டு நீட்டிப்பு தரப்படுவதில்லை. அந்த சமயங்களில் ஆண்டு தோறும் ஹெச் 1 விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும் போதும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும்.

சாதரணமாக மூன்று மாதங்களில் விசா விண்ணப்பத்திற்கான அனுமதி கிடைக்கும். அதிக பட்சமாக 240 நாட்கள் வரை எடுத்துக் கொள்வார்கள்.

விரைவாக அனுமதி வேண்டும் என்றால் ப்ரீமியம் ப்ராசஸிங் என்ற முறையில் கூடுதல் சிறப்புக் ட்டணம் செலுத்த வேண்டும்.. ப்ரீமியம் ப்ராசஸிங் முறையில் 15 நாட்களுக்குள் முடிவு தெரிந்து விடும்.

க்ரீன் கார்டுக்கான மூன்றாம் நிலை விண்ணப்பம் சமர்ப்பித்து EAD கிடைக்கும் வரை ஹெச் 1 விசா நீட்டிப்பு செய்ய வேண்டும்.

USCIS அலுவலகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அலுவலர்கள் உள்ளனர். அவர்கள் தான் ப்ரீமியம் ப்ராசஸிங் மற்றும் சாதாரண விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு அனுப்ப வேண்டும்.

ப்ரீமியம் ப்ராசஸிங் மூலம் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், சாதாரண விண்ணப்பங்கள் மீது கவனம் செலுத்த முடியாம போகிறதாம். சாதாரண விண்ணப்பங்கள் 240 நாட்கள் எல்லையைத் தொடும் நிலை ஏற்பட்டு வருவதால் ப்ரீமியம் ப்ராசஸிங் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளாதாக USCISஅலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.

இதைத்தான் நமது ஊடகங்கள் ஹெச் 1 விசாவுக்கு தற்காலிக தடை என்று செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேலும் இதற்கு முன்பும் கூட இப்படி தற்காலிக நிறுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இது ஒன்றும் புதிதல்ல.

ட்ரம்ப் ஆட்சியை பிடித்த பிறகு, அமெரிக்காவில் வெளியாகும் சிறு தும்மல் ஏற்பட்டால் கூட நம்மவர்களுக்கு பீதியை கிளப்புகிறது போலிருக்கிறது.

-இர தினகர்

English summary
USCIS has issued a statement stating premium processing for H1 B visa petitions are suspended temporarily. Some of the Indian media wrongly interpreted it as suspension of H1 B visa petitions itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X