ஒரு நொடி ஸ்டன் ஆன இஸ்ரேல்.. அயர்ன் டோமை தாண்டி உள்ளே வந்த ஈரான் ஏவுகணைகள்.. வீடியோவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதலைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது தாக்குதலை நடத்தியது. இதை அடுத்து, டெஹ்ரான் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஈரான் அணு மற்றும் இராணுவ தளங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ராணுவம் இஸ்பஹானில் உள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.

Israel Iran

மிக மோசமான அட்டாக்

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் ஈரான் மீது ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நேற்று இரவு நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மற்றும் நடான்ஸ் அருகே உள்ள ஈரான் நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் மையப்பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது.

ஆரம்ப அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி மற்றும் தலைமை அதிகாரி முகமது பாகேரி உட்பட பல உயர்மட்ட ஈரான் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல்

ஈரானின் ஃபோர்டோவ் அணு உலை அருகே இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் தாக்கியபோது, ​​டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் கடுமையான வெடிச்சத்தங்கள் கேட்டன. மேலும் இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்தன. ஈரான் நாட்டின் செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ (IRNA) நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது.

நேற்று காலை ஈரான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்டது. இரண்டு உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் ஆறு முன்னணி அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் ஈராக் உடனான 1980 களின் போருக்குப் பின்னர் சந்திக்கும் மிக முக்கியமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இஸ்ரேல் தான் இந்த தாக்குதல்களை தொடங்கி போரை ஆரம்பித்ததாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கையில் மூத்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர். ஈரானின் துணை இராணுவ புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் Hossein Salami கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது. ஈரானிய ஆயுதப் படைகளின் தளபதி ஜெனரல் Mohammad Bagheri, அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

சுமார் 200 இஸ்ரேலிய விமானங்கள் இந்த தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்று சுமார் 100 இலக்குகளை தாக்கியுள்ளன. ஈரான் இஸ்ரேலை நோக்கி 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், தெரிவித்துள்ளது. டெஹ்ரான் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு அம்சங்களை தாண்டி இந்த தாக்குதலை ஈரான் மேற்கொண்டு உள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் Ali Hosseini Khamenei கூறுகையில் இஸ்ரேல் முதலில் தாக்கியது. அவர்களுக்கு இப்போது தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+