For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுஎஸ் அதிபர் தேர்தல்.. விலகினார் க்ரூஸ்... "ஜனநாயக" ஹிலரியுடன் மோதும் "பணநாயக" டிரம்ப்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலரி க்ளிண்டனும் பெரும் பணக்காரருமான டொனால்ட் ட்ரம்ப் - ம் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.

உட்கட்சி தேர்தல்

உட்கட்சி தேர்தல்

அதிபர் தேர்தல் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக , குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஆளும் ஜனநாயகக் கட்சியில் ஹிலரி க்ளிண்டனும் , பெர்னி சாண்டர்ஸும் போட்டியில் உள்ளார்கள்.

நேற்று நடைபெற்ற இண்டியான மாநில தேர்தலில் சாண்டர்ஸ் வெற்றி பெற்றாலும், ஹிலரி அதிகமான டெலிகேட்ஸ் எண்ணிகையுடன் முன்னிலையில் இருக்கிறார். மீதம் தேவையான டெலிகேட்ஸ் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

டெட் க்ரூஸ் விலகல்

டெட் க்ரூஸ் விலகல்

குடியரசுக் கட்சியில் ஜெப் புஷ், க்ரிஸ் கிறிஸ்டி, மார்கோ ரூபியோ உள்ளிட்ட ஜாம்பவான்கள் என 16 பேர் களத்தில் இறங்கினார்கள். நேற்றைய தேர்தலுக்கு முன்னர் வரை டொனால்ட் ட்ரம்ப், டெட் க்ரூஸ் மற்றும் ஜான் கேசிக் போட்டியில் இருந்தனர்

இண்டியானாவில் டெட் க்ருஸை, அதிக வித்தியாசத்தில் ட்ரம்ப் தோற்கடித்தார். இதைத் தொடர்ந்து, போட்டியிலிருந்து விலகுவதாக க்ரூஸ் அறிவித்துள்ளார்.

இண்டியானாவில் வென்றிருந்தால் கூட, க்ரூஸ்-க்கு தேவையான டெலிகேட்ஸ் கள் தேர்தல் மூலம் கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை.

மாநாட்டுத் தேர்தல் குழப்பம் தீர்ந்தது

மாநாட்டுத் தேர்தல் குழப்பம் தீர்ந்தது

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 1237 டெலிகேட்ஸ்கள் தேவை. ட்ரம்ப்-வசம் 1053 டெலிகேட்ஸ்கள் தற்போது உள்ளார்கள். க்ரூஸ் விலகிய நிலையில் அடுத்து வரப்போகும் மாநிலத் தேர்தல்களில் ட்ரம்ப் -ன் வெற்றி நிச்சயக்கப்பட்ட ஒன்றாகும்.

1237 டெலிகேட்ஸ்கள் கிடைத்த பின்னர், மீதம் உள்ள மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறத் தேவையும் இல்லை. கட்சி மாநாட்டிலும் வேட்பாளர் தேர்தல் இருக்காது. டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் அதிகாரப் பூர்வமான வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

பின் வாங்காத சான்டர்ஸ்

பின் வாங்காத சான்டர்ஸ்

ஜனநாயக் கட்சியில், சான்டர்ஸ் இண்டியானாவைக் கைப்பற்றி டெலிகேட்ஸ்கள் எண்ணிக்கையை 1443 ஆக உயர்த்தியுள்ளார். ஹிலரி 2217 பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

ஜனநாயகக் கட்சி விதிப்படி மொத்தம் 4765 டெலிகேட்ஸ்கள் உள்ளனர். அதிபர் வேட்பாளராவதற்கு 2383 டெலிகேட்ஸ்கள் தேவை.

சூப்பர் டெலிகேட்ஸ்கள் 513 பேர் ஹிலரிக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதைத் தவிர்த்தால் இருவருக்கும் 304 டெலிகேட்ஸ்கள் வித்தியாசம்தான் உள்ளது.

கலிஃபோர்னியா உள்ளிட்ட மீதமுள்ள மாநிலங்களில் வெற்றிபெற்றால் சூப்பர் டெலிகேட்ஸ் தனக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் சாண்டர்ஸ் இன்னும் போட்டியில் உள்ளார்.

இந்த தடவை வேட்பாளராக ஹிலரி நிச்சயம்

இந்த தடவை வேட்பாளராக ஹிலரி நிச்சயம்

சூப்பர் டெலிகேட்ஸ்கள், கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள், கவர்னர்கள், செனட்டர்கள் ஆகியோர் ஆவார்கள். இவர்களில் பல பில் க்ளிண்டன் காலம் முதலாகவே அவர் பக்கம் இருப்பவர்கள். ஆகையால் சான்டர்ஸ் பக்கம் செல்வதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவாகும்.

மீதமுள்ள மாநிலங்களிலும் ஹிலரிக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. சான்டர்ஸ் தொடர்ந்து போட்டியில் இருக்கும் நிலையில், கடைசியாக நடைபெற உள்ள ஜூன் 7ம் தேதி வரை உட்கட்சி தேர்தல் தொடரும்.

ஆனாலும் இறுதியில் ஹிலரிக்கு தேவையான டெலிகேட்ஸ்கள் கிடைக்க பெரும் வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் முதல் பெண் அதிபர்?

அமெரிக்காவின் முதல் பெண் அதிபர்?

எதிரணியில் டொனால்ட் ட்ரம்ப், சர்ச்சையான பேச்சுக்களால் பெண்கள் மத்தியில் பெரும் அவப் பெயரை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். குடியரசுக் கட்சியின் பெண்கள் கூட ஹிலரிக்கு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

2012 ஆண்டில் தான் ட்ரம்ப் முறைப்படி குடியரசுக் கட்சி உறுப்பினர் ஆனார். அதுவரையிலும் ஜனநாயக கட்சிக்கு ஏராளமான நன்கொடைகள் வழங்கி வந்துள்ளார். ஹிலரி க்ளிண்டனின் அறக்கட்டளைக்கு கூட ட்ரம்ப் நன்கொடை வழங்கியுள்ளார்.

ட்ரம்ப்-க்கு எதிராக குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவினர் தீவிர எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். டெட் க்ரூஸ்- ஐ நம்பியிருந்த அவர்கள் தற்போது மூன்றாவது கட்சியான ‘விடுதலை (லிபர்ட்டேரியன்)க் கட்சிக்கு' ஆதரவு தெரிவிக்கப் போவதாக தெரிகிறது.

தற்போதைய நிலவரப்பட, டொனால்ட் ட்ரம்ப்-ஐ எளிதாக வென்று அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆக ஹிலரி க்ளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

-டல்லாஸிருந்து இர தினகர்

English summary
In US primary elections Republican party candidate Ted Cruz quit the race following defeat in Indiana. This has cleared the path for Donald Trump. Though Bernie Sanders of Democratic party won Indiana, still there is a huge gap in numbers between him and Hillary Clinton. November Presidential election contest will be between Hillary Clinton and Donald Trump and Hillary is expected to win as first women president of US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X