விக்கி லீக் அசாஞ்சேவிற்கு ஸ்காட்லாண்டு யார்டு பாதுகாப்புடன் ஒரு நாளைக்கு 9 லட்சம் செலவு!
லண்டன்: உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் தலையீட்டை இணையதளம் மூலமாக வெளியே கொண்டுவந்த ஜூலியன் அசாஞ்சேவிற்கு ஸ்காட்லாந்து யார்டு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.அ
விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் மக்களின் சுதந்திரம் மற்றும் உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் தலையீட்டை உறுதி செய்யும் ஆவணங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஜுலியன் அசாஞ்சே.

2010 ஆம் ஆண்டு ஸ்டாக் ஹோமுக்கு உரையாற்ற வந்த போது இரண்டு பெண்களை பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டிய ஸ்வீடன் அரசு, கடந்த ஆண்டு இவரை கைது செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் அசாஞ்சே வெளிநாடு செல்வதற்கான அனுமதியை இங்கிலாந்து நீதிமன்றம் ரத்து செய்தது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 2012 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சமடைந்தார்.
அதிலிருந்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் அவருக்கு பாதுகாப்பளித்து வருகின்றனர். ஏறத்தாழ 950 நாட்களுக்கும் மேலாக ஈக்வடார் தூதரகத்திலேயே அசாஞ்சே அடைந்து கிடக்கிறார்.
வெளியே வந்தால் அவரை ஸ்வீடன் அரசு கைது செய்யும் அபாயம் இருக்கிறது. அதே நேரம் அமெரிக்காவும் அவரை தண்டிப்பதற்கான தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
இங்கிலாந்தின் தகவல் அறியும் சுதந்திர சட்டத்தின் கீழ் எல்.பி.சி வானொலி மூலம் பெறப்பட்ட தகவலின் படி கடந்த அக்டோபர் 2014 ஆம் ஆண்டு வரை ஜீலியன் அசாஞ்சேவின் பாதுகாப்பிற்காக 9 மில்லியன் பவுண்ட் செலவிடப்பட்டது தெரிய வந்தது.
அதன் பிறகு கடந்த மூன்று மாதங்களை சேர்த்தால் இதுவரை 10 மில்லியன் பவுண்ட் செலவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 10000 பவுண்ட் அதாவது தோராயமாக 9,45,222.86 ரூபாய் அசாஞ்சேவின் பாதுகாப்புக்காக செலவிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!