For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கபாப் கடை மெனுவில் "ஏகே 47"... பிரெஞ்சு உணவக உரிமையாளர் கைது

Google Oneindia Tamil News

பெஸியர்ஸ், பிரான்ஸ்: பிரான்ஸின் பெஸியர்ஸ் நகரில் கபாப் கடை ஒன்றின் மெனுவில் ஏகே 47 என்று உணவுக்குப் பெயரிட்டிருந்தது தொடர்பாக கடை உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நபருக்கு துப்பாக்கி என்றால் உயிராம். அதனால்தான் தனது உணவு வகைக்கு துப்பாக்கியின் பெயரை வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் அவர் தீவிரவாதத்திற்கு ஆதரவானவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஏகே 47 மட்டுமல்லாமல், எம் 16 என்ற துப்பாக்கியின் பெயரையும் தனது கபாப் ஒன்றுக்கு அவர் சூட்டியிருந்தார்.

இவரது கடையின் பெயர் டோபிப் பர்கர். இக்கடையில் உள்ள பல உணவு வகைகளுக்கு துப்பாக்கிகளின் பெயரையே சூட்டியுள்ளார் இந்த கடை நிறுவனர்.

மேலும் இவரது உணவகத்தின் பேஸ்புக் பக்கத்தில் போய்ப் பார்த்தால் பல்வேறு வகை துப்பாக்கிகளை அணிவகுக்க வைத்து அலங்கரித்துள்ளார். கையெறி குண்டுகளின் படங்களையும் இவரது பேஸ்புக்கில் பார்க்கலாம்.

44 வயதான இந்த நபர் கத்தோலிக்கராக இருந்து பின்னர் இஸ்லாமுக்கு மாறியவர் ஆவார். இதற்கு முன்பு இவர் 6 கிலோ கஞ்சா மற்றும், 2 துப்பாக்கிகள், கைத் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தாதக கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் அனுபவித்தவர் ஆவார்.

English summary
A man, who runs a gun-themed kebab restaurant in Beziers, southern France was arrested on suspicion of glorifying terrorism. His entire restaurant - Toubib Burger - appears to be an homage to weaponry, with the T in the shop's name resembling a Kalashnikov.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X