For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒன் மேன் ஷோ! டெத் ஓவரில் மரண பயம் காட்டிய கோலி.. மின்னல் வேக பந்தில் மிரட்டல் அடி -மிரண்ட பாகிஸ்தான்

Google Oneindia Tamil News

கான்பெரா: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற காரணமாக இருந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது அசத்தல் ஆட்டத்தால் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்து இருக்கிறார்.

உலகக்கோப்பை, ஐபிஎல் என பல கிரிக்கெட் தொடர்களை ரசிகர்கள் கண்டுகளித்தாலும் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படுவது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிதான்.

பல்வேறு அரசியல் காரணங்களால் இருநாடுகளிடையே நேரடி தொடர் போட்டிகள் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

ஆரம்பமே 4 விக்கெட்.. மாஸ்டர் பிளான்.. ஸ்மார்ட்டாக ஆடிய கோலி! பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது எப்படி?ஆரம்பமே 4 விக்கெட்.. மாஸ்டர் பிளான்.. ஸ்மார்ட்டாக ஆடிய கோலி! பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது எப்படி?

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதின. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்ற நிலையில், 2 வது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றியை பதிவு செய்தது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று இந்தியா பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பந்துவீசியது. இந்திய அணி வீரர்கள் அர்ஷ்தீப் சிங்கின் அசத்தல் பந்துவீச்சால் தொடக்கத்தில் தடுமாறிய பாகிஸ்தான், கடைசி நிலைத்து ஆடி 159 ரன்களை குவித்தது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்த 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாறியது. சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேலும் அடுத்தடுத்த ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கேப்டன் விராட் கோலி.

கிங் கோலி

கிங் கோலி

முதல் 10 ஓவர்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பாகிஸ்தான் வெற்றிபெறவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மக்கள் கணிப்புகள் காட்டின. ஆனால், தனது அனுபவமும் அதிரடியும் கலந்த பேட்டிங்கால் கணிப்புகளை தவிடுபொடியாக்கினார். 19 வது ஓவரில் 140 கிமீக்கும் அதிகமான வேகத்தில் வீசும் ஹாரிஸ் ரவூஃப் ஓவரின் கடைசி 2 பந்தில் சிக்சரை பறக்கவிட்டார் கோலி. நவாஸ் வீசிய கடைசி ஓவரின் நோ பாலில் கோலி அடித்த சிக்சர் இந்திய அணியின் வெற்றியை உறுதிபடுத்தியது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த கோலி ஃபார்ம் அவுட் ஆகிவிட்டதாக கடந்த ஆண்டு விமர்சனங்கள் குவிந்தன. அதன் பின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலியை அணியிலிருந்தே நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ஆசிய கோப்பையில் தனது ஃபார்மை மீண்டும் நிரூபித்த கோலி, தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82 ரன்களை விளாசி வென்றுகொடுத்துள்ளார்.

English summary
Former captain Virat Kohli, who led the Indian team to a thrilling victory in the T20 World Cup cricket match against Pakistan, has once again proved himself with his extraordinary performance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X