For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசிய விமானத்தில் ஏறும் முன்பு தேடித் தேடி மனைவிக்கு வாட்ச், பிரேஸ்லெட் வாங்கிய சீனர்

By Siva
Google Oneindia Tamil News

பெர்த்: மாயமான விமானத்தில் பயணித்த சீன வாலிபர் அந்த விமானத்தில் ஏறுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு பெர்த்தில் உள்ள ட்யூட்டி ப்ரீ கடையில் தனது மனைவிக்கு கைக்கடிகாரம், பிரேஸ்லெட் வாங்கியுள்ளார்.

ஆஸ்திரேலிய தலைநகர் பெர்த்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ட்யூட்டி ப்ரீ கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் மலேசிய விமானம் மாயமான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

Malaysia Airlines MH370: Perth duty free store attendant recalls chance encounter with passenger from lost plane

இது குறித்து அந்த பெண் கூறுகையில்,

சீனாவைச் சேர்ந்த ஜியான் வென் ஷி(26) என்பவர் மலேசிய விமானத்தில் ஏறுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு தான் எங்கள் கடைக்கு வந்தார். அவர் தனது மனைவிக்கு பரிசாக கொடுக்க கைக்கடிகாரம் ஒன்றை வாங்கினார். மேலும் அவர் 40 நிமிடங்கள் தேடித் தேடி பரிசுப் பொருட்களை வாங்கிச் சென்றார். அவர் தனது மனைவிக்கு கொடுக்க பிரேஸ்லெட் ஒன்றை எனது உதவியுடன் தேர்வு செய்தார். அவர் சென்ற விமானம் மாயமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஜியான் உங்களை பற்றியே தான் நினைத்துக் கொண்டிருந்தார் என்பதை அவரின் மனைவி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பிய இமெயிலை ஜியானின் மனைவிக்கு அனுப்பி வைப்பதாக மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

English summary
Xian Wen Shi, a 26-year old Chinese man bought a watch and a bracelet for his wife from a duty free shop in Perth international airport just hours before boarding the ill-fated missing Malayasia airlines flight MH 370.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X