For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசிய மாஜி பிரதமரின் சொந்தக்காரர் மாயமான விமானத்தின் பைலட்.. தமிழ் எம்.பியின் நண்பரும் கூட!

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மாயமாகியுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட் ஜகாரி அகமது ஷா, தனது நெருங்கிய உறவினர்தான் என்று முன்னாள் பிரதமரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

Malaysia opposition leader Anwar admits MH370 pilot is his relative

தனது மருமகனின் சொந்தக்காரர்தான் ஜகாரி அகமது ஷா என்றும் அன்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்வர் கூறுகையில், எனது ஒரு மருமகனின் சொந்தக்காரர்தான் ஜகாரி. இதை நான் மறுக்கவில்லை, மறைக்கவும் இல்லை. நான் அவரை பலமுறை சந்திக்கவும் செய்துள்ளேன். மேலும், அவர், சுபாங் பகுதி எம்.பி சிவராசாவின் நெருங்கிய நண்பரு் கூட என்றார் அன்வர்.

முன்னதாக செளத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகைக்கு அவர் முன்பு அளித்த ஒரு பேட்டியில், ஜகாரி யார் என்பது எனக்கு நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவரது புகைப்படத்தைப் பார்த்தபோதுதான் அவரை சில கட்சிக் கூட்டங்களில் பார்த்தது நினைவுக்கு வருகிறது என்று கூறியிருந்தார் அன்வர். தற்போதுதான் அவர் தனது சொந்தக்காரர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

English summary
Opposition leader Anwar Ibrahim has admitted that Malaysia Airlines MH370 pilot Captain Zaharie Ahmad Shah is related to his son's in-laws. "I am not denying that he ( Zaharie) is related to one of my in-laws and that I have met him on several occasions. "In fact, he is a close friend of (PKR supreme council member and Subang MP) R. Sivarasa, as we said before," Mr Anwar told reporters at the Parliament lobby here on Tuesday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X