For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்- மலேசிய பிரதமரின் பாட்டியும் பலி

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசிய விமானம் உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் மலேசிய பிரதமரின் பாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

உக்ரைன் வான்வழியாக நேற்று முன்தினம் 295 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் எம்ஹெச்17 விமானம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இவ்விமானத்தில் பயணித்த அனைவருமே உடல் கருகி பலியாகினர்.

சேகரிக்கப்படும் தகவல்கள்:

சேகரிக்கப்படும் தகவல்கள்:

இறந்தவர்களைப் பற்றிய தகவல்கள் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பிரதமரின் பாட்டி:

பிரதமரின் பாட்டி:

இந்தநிலையில், இந்த கொடூர சம்பவத்தில் அந்த விமானத்தில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் பாட்டி சிட்டி அமிராவும் பயணித்து, பலியானது தெரிய வந்துள்ளது.

உறவினர்களிடம் அடைக்கலம்:

உறவினர்களிடம் அடைக்கலம்:

தற்போதைய மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் தாய் வழி தாத்தாவின் இரண்டாவது மனைவியான சிட்டி அமிரா 83 வயதானவர். இவர் உறவினர்களின் பராமரிப்பில் நெதர்லாந்தில் வசித்து வந்தார்.

ரம்ஜான் பண்டிகை:

ரம்ஜான் பண்டிகை:

வரப்போகும் ரம்ஜான் பண்டிகையை தான் பிறந்து, வளர்ந்த சொந்த நாடான இந்தோனேசியாவில் கொண்டாடுவதற்காக ஆம்ஸ்டெர்டாமில் இருந்து தனியாக வந்து விமானம் ஏறினார்.

பரிதாப பலி:

பரிதாப பலி:

கோலாலம்பூர் செல்லும் வழியில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களில் சிட்டி அமிராவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

English summary
One of the passengers in Malaysian flight crash was Malaysian PM’s grandma officials say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X