மாலத்தீவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாலே: மாலத்தீவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாலத்தீவில் 9 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சையது உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதனை ஏற்க அதிபர் யாமின் மறுத்திருந்தார்.

இதையடுத்து அதிபர் யாமின் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்கிற நிலைமை உருவானது. இந்நிலையில் திடீரென எமர்ஜென்சியை பிரகடனம் செய்தார் அதிபர் யாமின்.

maldives

அத்துடன் முன்னாள் அதிபர் கையூம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோரை கைது செய்தும் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து செவ்வாய்க்கிழமையன்று எஞ்சிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் முந்தைய உத்தரவை ரத்து செய்தனர்.

இத்தீர்ப்பை மாலத்தீவு அதிபர் யாமின் வரவேற்றுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A day after the declaration of emergency by President Abdulla Yameen and arrest of two top judges, Maldives' Supreme Court on Tuesday revoked an order to release nine high-profile political prisoners.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற