ஒபாமாவாகவே இருந்தாலும் மகளுக்கு அப்பாதானே... மகள் பட்டமளிப்பு விழாவில் ஆனந்தக் கண்ணீருடன் ஒபாமா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மூத்த மகள் மால்யா உயர் நிலைப் பள்ளி படிப்பை முடித்ததையடுத்து நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மூத்த மகள் மால்யா வாஷிங்டனில் உள்ள சிட்வெல் பிரெண்ட்ஸ் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.
அமெரிக்காவில் உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் பட்டமளிப்பு விழா நடைபெறும்.

மால்யா
மால்யாவின் பள்ளியிலும் கடந்த வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஒபாமா கலந்து கொண்டார். மகளின் முக்கியமான நாளில் தானும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக அவர் தனது அலுவல்களை விட்டுவிட்டு பள்ளிக்கு சென்றார்.

அழுதுவிடுவேன்
பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுமாறு பள்ளி நிர்வாகம் ஒபாமாவை கேட்டுக் கொண்டது. மேடையில் ஏறி பேசினால் நான் அழுதுவிடுவேன் அதனால் வேண்டாம் என்று கூறி அவர் பேச மறுத்துவிட்டார்.

ஒபாமா
மக்கள் பட்டம் வாங்கியதை பார்த்த ஒபாமா கண்கலங்கிவிட்டார். ஒபாமா அழுததை புகைப்படம் எடுக்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒபாமா வெள்ளை மாளிக்கைக்கு முதல்முதலாக தேர்வானபோது மால்யாவுக்கு வயது 10 ஆகும். மால்யாவுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளது.

கல்லூரி
மால்யா இந்த ஆண்டு சேராமல் 12 மாத இடைவேளை விட்டுவிட்டு அடுத்த ஆண்டு தான் கல்லூரியில் சேர்கிறார். இந்த ஓராண்டு இடைவேளையில் அவர் என்ன செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications