For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

14 வயது “மனைவியை” விவாகரத்து செய்து விட்டு 12 வயது சிறுமியுடன் 2ம் திருமணம்!

Google Oneindia Tamil News

நைஜர்: நைஜீரியாவில் ஏற்கனவே 14 வயதான சிறுமியை திருமணம் செய்த ஒருவர் தற்போது அவரை தள்ளிவைத்துவிட்டு 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்தவர் மைமூனா அப்துல்லா என்ற 14 வயது சிறுமி.

அவரை பெற்றோர் மகமது சைது என்பவருக்கு 120 டாலருக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து வைத்தனர்.

கொடுமை படுத்திய கணவர்:

கல்யாணம் முடிந்தவுடன் சைது, மைமூனாவை வீட்டில் பூட்டி வைத்துள்ளார். மேலும், அடித்து, உதைத்து வேலை வாங்கியுள்ளார். கணவரின் கொடுமை தாங்காமல் மைமூனா தன்னுடைய தாய் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டார்.

விவாகரத்துக்கு காரணம் படிப்பு:

இதனால், மைமூனை விவாகரத்து செய்து விட்டார் சைது. அதுமட்டுமல்லாமல் விவாகரத்து செய்ததற்கு காரணமாக மைமூனின் படிப்பை சுட்டிக் காட்டியுள்ளார் அவர்.

சமரசம் செய்ய முடிவு:

மைமூனாவின் தந்தை சிறுமியின் வாழ்க்கை பிரச்சினை குறித்து சமரசம் செய்ய அங்குள்ள மதத்தலைவர்களை அழைத்துள்ளார்.

பலிக்காத பேச்சுவார்த்தை:

உடனே, மைமமூனாவின் முன்னாள் கணவர் தான் மைமூனாவை திருமணம் செய்ய கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு உள்ளார்.ஆனால் மைமூனாவின் தந்தை அதற்கு நிலம் வாங்கி விட்டார். இதனால், சைது சமரசத்திற்கு உட்படவில்லை.

மறுபடி ஒரு குழந்தைத் திருமணம்:

இந்நிலையில் மைமூனவை விவாகரத்து செய்துள்ள சைது தற்போது மற்றொரு 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமையின் காரணமாக இங்கு குழந்தை திருமணங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Maimuna Abdullahi from Nigeria was sold into marriage by her parents for £120 and abused by her new husband, who locked her away and forced hard labour on her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X