For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வயிற்றை பறி கொடுத்த கேன்சர் நோயாளி.. அவரது "கடைசி சாப்பாட்டு ஆசை" என்ன தெரியுமா?

ஆபரேஷனுக்கு முன்பு இளைஞரின் ஆசை பரிதாப உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வயிற்றை பறி கொடுத்த கேன்சர் நோயாளி

    துபாய்: வயிற்று புற்றுநோய் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் "கடைசி ஆசை" சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை மட்டுமல்லாமல் அனைவரையுமே நெகிழ வைத்துள்ளது.

    துபாயை சேர்ந்த இளைஞர் குலாம் அப்பாஸ். திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு ரொம்ப நாளாக வயிற்று வலி இருந்திருக்கிறது. அதனால் மருத்துவமனை சென்று நிறைய டெஸ்ட்கள் எடுத்து பார்க்கப்பட்டது. அதில், அவருக்கு வயிற்றில் புற்று நோய் இருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். இதனால் இளைஞர் தன்னுடைய நோய்க்கு நீண்டகாலமாகவே ரஷித் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.

     கட்டி வளர்ந்தது

    கட்டி வளர்ந்தது

    ஆனாலும் ஒன்றும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என தெரிகிறது. வயிற்றில் கட்டி உருவானது. மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சையில் இருந்தாலும் அந்த கட்டி மட்டும் குறையவே இல்லை. மாறாக பெரிதாக வளர்ந்துவிட்டது. கடைசியில் இப்போது அந்த கட்டி வயிற்றையே அடைத்து விட்டது. இதனால் நிலைமை நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

     கடைசி ஆசை

    கடைசி ஆசை

    ஆபரேஷன் செய்து அந்த கட்டியை எடுத்துவிடுவதுதான் நல்லது என்று டாக்டர்கள் அப்பாஸிடம் சொன்னார்கள். இதற்கு அப்பாசும் சரி என்று சொன்னதுடன், தனக்கு ஒரு கடைசி ஆசை இருக்கிறது என்றார். இதனால் மருத்துவர்கள் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு, என்ன உன் கடைசி ஆசை என்றார்கள், "வயிறு அகற்றப்படுவதற்கு முன், எனக்கு பிடித்த சிக்கன் பிரியாணியை கடைசியாக சாப்பிட வேண்டும்" என்றார்.

     மணக்க மணக்க..

    மணக்க மணக்க..

    அப்பாஸ் இப்படி சொன்னதும், இதற்கு மருத்துவர்கள் பரிதாப உணர்வை தவிர வேறு எதையும் உதிர்க்க தெரியவில்லை. அப்பாஸ் மனைவியிடம் டாக்டர்கள் இதனை தெரியப்படுத்தினார்கள். இதையடுத்து, மணக்க மணக்க பிரியாணியை தன் கையாலேயே சமைத்து கொண்டு வந்து கொடுத்தார் அப்பாஸ் மனைவி. நீண்ட காலமாகவே மருத்துவமனையில் இருந்த அப்பாஸ், மனைவி கொடுத்த பிரியாணியை கடைசியாக வயிறு முட்ட ருசித்து ருசித்து சாப்பிட்டார்.

     இதுதான் முதல்முறை

    இதுதான் முதல்முறை

    ஆபரேஷனை பற்றி அப்பாஸ் சொல்லும்போது, "என் 2 குழந்தைகளும் நான் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுவார்கள். அவர்கள் நாளை நல்ல நிலைமைக்கு வருவதை நான் கண்கூடாக பார்க்க வேண்டும். அதுவரைக்கும் உயிருடன் இருக்கத்தான் இப்படி ஒரு கடின முடிவை எடுத்திருக்கிறேன். இதுவரைக்கும் இந்த மருத்துவமனையில் வயிற்றில் உள்ள ஏதேனும் ஒரு உறுப்புதான் அகற்றப்படும். ஆனால் இப்படி ஒரேயடியாக வயிறையே அகற்றுவது இதுதான் முதல்முறை." என்றார்.

     திரவ உணவுதான்

    திரவ உணவுதான்

    தற்போது ஆபரேஷன் முடிந்து அப்பாஸ் நலமாக உள்ளாராம். அவரது கேன்சர் பாதித்த பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன. முன்னெச்சரிக்கையாக கீமோதெரபி நடந்து வருகிறது. இனி அவர் திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள முடியுமாம். ஆபரேஷனுக்கு முன்பு சிக்கன் பிரியாணி கேட்டு வாங்கி சாப்பிட்ட அப்பாஸின் அந்த ஆசை.. டாக்டர்களை மட்டுமல்லாமல் அந்த மருத்துவமனையில் அனைவரையுமே உருக்கி விட்டதாம்.

    English summary
    Man eats Biriyani as last meal before getting his Stomach removed
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X