
அதோ பாரு.. கீழே என்ன தெரியுது.. திடீரென 1000 அடி உயர மலையிலிருந்து கர்பிணி மனைவியை தள்ளிய கணவன்
இஸ்தான்புல்: துருக்கியில் 1,000 அடி உயர மலையில் இருந்து 7 மாத கர்ப்பிணி மனைவியை தள்ளி கொலை செய்த கொடூரக் கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முதலில், தனது மனைவி மலையில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக கூறி நாடகமாடிய அவரது கணவரை, போலீஸார் சினிமா பாணியில் பொறி வைத்து பிடித்தனர்.
மனைவியின் பெயரில் உள்ள இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக சிறிது கூட ஈவு இரக்கமில்லாமல் நிறைமாத கர்ப்பிணியை கணவர் கொலை செய்த சம்பவம் துருக்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏலே.. நீ ஆர்டிஸ்ட்டுனு நிரூபிச்சுட்ட.. சோஃபாவை சாப்டுறாங்க? என்ன இது? வியப்பூட்டும் துருக்கி பெண்

எமனாக மாறிய இன்சூரன்ஸ்..
துருக்கி தலைநகர் அன்காராவை சேர்ந்தவர் ஹக்கான் அய்சல் (41). இவரது மனைவி செம்ரா (32). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், செம்ரா மீண்டும் கர்ப்பமானார். இந்த சூழலில், 25 ஆயிரம் டாலருக்கு (ரூ.20 லட்சம்) செம்ரா தனது உயிரை காப்பீடு செய்திருந்தார். அந்த சமயத்தில், ஹக்கான் அய்சலுக்கு வேலை பறிபோனது. சொந்தமாக தொழில் தொடங்க ஹக்கான் திட்டமிட்டார். ஆனால் அதற்கு அவருக்கு பெரிய தொகை தேவைப்பட்டது. அப்போதுதான், ஹக்கானுக்கு தனது மனைவி ரூ.20 லட்சத்துக்கு தனது உயிரை காப்பீடு செய்திருப்பது தெரியவந்தது.

மலை உச்சியை சுற்றிப் பார்க்க..
இதையடுத்து, ரூ.20 லட்சம் காப்பீடு பணத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என ஹக்கான் முடிவு செய்தார். இதற்காக பல வழிகளை அவர் ஆராய்ந்து பார்த்தார். ஆனால் எதுவும் சரியாக வரவில்லை. இதனால் தனது மனைவியை கொன்றுவிடுவது என முடிவெடுத்தார் ஹக்கான். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முக்லா பகுதியில் உள்ள 'பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்கு' (Butterfly valley) என்ற சுற்றுலா தலத்துக்கு தனது மனைவி செம்ராவை ஹக்கான் அழைத்துச் சென்றார். அப்போது அவர் 7 மாத கர்ப்பிணி. அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள், கடைசியாக அங்குள்ள உயரமான மலைப்பகுதிக்கு சென்றனர். உயரமான பகுதி என்றாலே பயப்படும் செம்ராவை, பல வழிகளில் சமாதானப்படுத்தி ஹக்கான் அழைத்துச் சென்றார்.

கொலை - சந்தேகம்..
அப்போது 1,000 அடி உயரம் கொண்ட மலை முகட்டுக்கு மனைவியை அழைத்துச் சென்ற ஹக்கான், சட்டென அவரை கீழே தள்ளிவிட்டார். பின்னர், எதுவும் தெரியாதது போல காரை எடுத்துக் கொண்டு அங்குள்ள காவல் நிலையத்துக்கு சென்று தனது மனைவி மலையில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக அவர் கூறி அழுது புரண்டு நாடகமாடினார். இதனைத் தொடர்ந்து, ஒரு வாரம் கழித்து செம்ராவின் உடல் மீட்கப்பட்டு ஹக்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது செம்ராவின் உடலை பார்த்து அவரது பெற்றோர், உடன் பிறந்தவர்கள் அனைவரும் அழுதுபுலம்பவே, ஹக்கான் எந்த கவலையும் இல்லாமல் இருந்தார். மேலும், செம்ராவின் இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காகன நடவடிக்கையில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

தண்டனை
இதை பார்த்த போலீஸாருக்கு, ஹக்கான் மீது சந்தேகம் வந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், மனைவி கீழே விழுந்தது விபத்துதான் என அவர் கூறி வந்தார். விசாரணையின் போது, செம்ரா தனியாக மலை உச்சிக்கு சென்றதாக அவர் கூறினார். அதே சமயத்தில், செம்ராவின் உறவினர்கள் அவருக்கு உயரமான பகுதி என்றாலே பயம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, ஹக்கானிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, மனைவியை மலையில் இருந்து கீழே தள்ளிவிட்டதை ஒப்புக்கொண்ட ஹக்கான், இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காகவே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம், ஹக்கானுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.