For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்பிரிக்க குடியரசில் போராளியை கொடூரமாய் கொன்று, உடலை இழுத்து சென்று, எரித்த ராணுவம்

By Siva
Google Oneindia Tamil News

பாங்குய்: மத்திய ஆப்பிரிக்க குடியரசில் போராளி என்று சந்தேகிக்கப்பட்ட நபரை ராணுவ வீரர்கள் குழு ஒன்று கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை தெருவில் இழுத்துச் சென்று, எரித்த கொடுமை நடந்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கடந்த மார்ச் மாதம் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்திற்கு வந்த இஸ்லாமிய போராளி குழு செலகா. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த அமைப்பு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரிந்து சென்று பல்வேறு இடங்களில் பொதுமக்களை தாக்குவது உள்ளிட்ட கொடூரங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைநகர் பாங்குயில் உள்ள பயிற்சி முகாமைச் சேர்ந்த ஒருவர் செலகா அமைப்பைச் சேர்ந்தவர் என்று ராணுவத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சீருடை அணிந்த சுமார் 20 வீரர்கள் அந்த நபரை தாக்கினர்.

குத்திக் கொலை

குத்திக் கொலை

ராணுவ வீரர்கள் சேர்ந்து அந்த நபரை கத்தியால் குத்திக் கொலை செய்தனர். அப்படியும் அவர்களின் வெறி அடங்கவில்லை. கத்திக் குத்தில் பலியானவரின் உடலை கூட வீரர்கள் விட்டுவைக்கவில்லை.

தெருவில் இழுத்து

தெருவில் இழுத்து

இறந்த நபரின் உடலை ராணுவ வீரர்கள் தெருக்களில் இழுத்துச் சென்றனர். அந்த உயிரற்ற உடலை வீரர்கள் ஏறி மிதித்து பாடாய் படுத்தியுள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ராணுவ வீரர்கள் இறந்த நபரின் உடல் மீது ஏறி குதிப்பது, இழுத்துச் செல்வது என்று அட்டூழியம் செய்தது உலக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கொடூரம்

கொடூரம்

இறந்தவரின் உடலை ஒரு வீரர் இழுத்துச் செல்ல மற்றொரு வீரர் அந்த உடலின் மீது போட பெரிய கல்லை தூக்கி வைத்துள்ளார். அந்த உடலை படாதபாடு படுத்தி இறுதியில் எரித்துவிட்டனர். ராணுவ வீரர்களின் இந்த கொடூரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
A group of soldiers in Central African Republic's capital Bangui stabbed a man to death, dragged his body in streets and finally burnt the corpse. They did so after they suspected the man to be a member of the ousted seleka rebels.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X