For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு இங்கிலாந்து சுதந்திரம் கொடுத்திருக்கக் கூடாது.. விஷம் கக்கிய பேஸ்புக் ஆண்டர்சன்!

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: ப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு இந்திய அரசின் டிராய் அமைப்பு ஆப்பு வைத்து விட்ட கோபத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கக் கூடாது. அதை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்று பேசி இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார் பேஸ்புக் இயக்குநர்கள் குழுவைச் சேர்ந்த மார்க் ஆண்டர்சன்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷுக்கர்பர்க் அதில் தலையிட்டு இதற்கும், பேஸ்புக் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதை நான் ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் மார்க் ஆண்டர்சன் கூற்றை தான் ஏற்கவில்லை என்றும் இந்தியா மீது பேஸ்புக் முழு மரியாதை வைத்துள்ளதாகவும் ஷுக்கர்பர்க் கூறியுள்ளார்.

ப்ரீ பேசிக்ஸ்

இணையச் சமநிலைக்கு ஆதரவாக டிராய் போட்ட உத்தரவால், பேஸ்புக் நிறுவனத்தின் ப்ரீ பேசிக்ஸ் திட்டம் கேள்விக்குறியாகி விட்டது. தற்போது இந்தியாவில் அதை நிறுத்தியும் விட்டது.

கொந்தளித்த ஆண்டர்சன்

டிராயின் உத்தரவால் பேஸ்புக் நிறுவனர் ஷுக்கர்பர்க் அதிர்ச்சி அடைந்தாலும் கூட அதை நாகரீகமான முறையில் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இயக்குநர்கள் குழுவைச் சேர்ந்தவரான மார்க் ஆண்டர்சன் என்பவர் ஓவராகவே கொப்புளித்து விட்டார்.. வார்த்தைகளை.

இங்கிலாந்து செய்த தப்பாம்!

உடனடியாக டிவிட்டரில் இனவெறி கருத்தை உதிர்த்து விட்டார். இந்தியா தொடர்ந்து அடிமை நாடாகவே இருந்திருக்க வேண்டும். இங்கிலாந்து இன்னும் தாமதமாக சுதந்திரம் கொடுத்திருக்கலாம் என்று அவர் கூறப் போக இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மார்க் மறுப்பு

ஆண்டர்சன் கருத்துக்கு உடனடியாக மார்க் ஷுக்கர்பர்க் எதிர்ப்பு தெரிவித்தார். இதை நான் ஏற்கவில்லை, பேஸ்புக் இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் மதிப்பு வைத்துள்ளது. ஆண்டர்சன் கருத்திலிருந்து நாங்கள் விலகியிருக்க விரும்புகிறோம். அதற்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருந்தார்.

மன்னிப்பு கேட்ட ஆண்டர்சன்

தனது கருத்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து தான் தவறாகக் கூறி விட்டதாகவும், காலனி ஆதிக்கத்திற்கு தான் எதிரானவன் என்றும் இந்தியாவின் சுதந்திரத்தை மதிப்பதாகவும் கூறியுள்ளார் ஆண்டர்சன். தனது கருத்துகக்ளை முழுமையாக திரும்பப் பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

English summary
FB's one of the directors Marc Anderson has been condemned for his anti India comments after TRAI ruling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X